குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாமா?
பயன்படுத்தலாம்.
கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்து கொண்டிருந்தோம். இச்செய்தி நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை. அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2610)
கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுக்க நபியவர்கள் காலத்தில் அஸ்ல் என்ற முறையை நபித்தோழர்கள் கையாண்டுள்ளனர். இதே பிரச்சனைக்கு நவீன காலத்தில் ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதை நாம் பயன்படுத்துவது தவறல்ல.
உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும்.
பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.
“பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
திர்மிதீ (109)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும்.
நூல் : முஸ்லிம் (579)
Comments
Post a Comment