மார்புகள்‌ மூலம்‌ கிளர்ச்சியூட்டுதல்‌:

 


மார்புகள்‌ மூலம்‌ கிளர்ச்சியூட்டுதல்‌:



மனைவியின்‌ மார்பகங்களை முத்தமிடுவது, நாவால்‌ துழாவுவது, சூப்புவது மற்றும்‌ பொதுவாகப்‌ பிசைவது அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி, அவளுக்குப்‌ பாலியல்‌ ரீதியாகக்‌ கிளர்ச்சி ஏற்படுத்துவதற்கும்‌ மிகத்‌ திறனுள்ளதொரு வழி. எனவே, கணவன்‌ இதை அலட்சியமாக விட்டுவிடக்கூடாது.



மனைவியும்‌ தன்‌ கணவனின்‌ நெஞ்சு மற்றும்‌ முலைக்‌ காம்புகளை முத்தமிடவும்‌ சூப்பவும்‌ செய்யலாம்‌. இதற்கு ஷரீஆவில்‌ எந்தவொரு தடையும்‌ இல்லை.


(பாலூட்டும் மனைவியின் மார்பிலிருந்து கணவன் பால் குடிக்கலாமா என்பதை பின்னர் பார்ப்போம்.. இன்ஷா அல்லாஹ்)



உடலைப்‌ பிடித்துவிடுதலும்‌ தடவுதலும்‌:



பிசைதலும்‌ வருடுதலும்‌. முன்விளையாட்டின்‌ ஒரு பகுதியாக, தம்பதியர்‌ இருவரும்‌ ஒருவருக்கொருவர்‌ உடல்களை மென்மையாகப்‌ பிடித்துவிடுதலும்‌ பிசைதலும்‌ தடவி, நீவி வருடுதலும்‌ அவசியம்‌. இது


பாலியல்‌ கிளர்ச்சியூட்டுவதற்குக்‌ திறன்மிக்கதொரு வழியாகும்‌. ஒருவர்‌ கைகள்‌, தோள்பட்டைகள்‌, முதுகு, வயிறு, தொடைகள்‌, கால்கள்‌, பாதங்கள்‌ உட்பட உடலின்‌ எல்லாப்‌ பகுதிகளையும்‌ தடவிக்‌ கோதி,


இச்சையைத்‌ தூண்டும்‌ வகையில்‌ பிடித்துவிடலாம்‌. எண்ணெய்‌ அல்லது நறுமணப்‌ பொடிகள்‌ (பவுடர்‌) போன்ற மசகு பொருளைப்‌ பயன்படுத்தி இதைச்‌ செய்யலாம்‌.



தம்பதியர்‌ இருவரும்‌ ஒருவருக்கொருவர்‌ “கிளர்ச்சி மண்டலங்‌களை: - உடலில்‌ உச்ச பாலுணர்வைக்‌ கிளப்பக்கூடிய பகுதிகளை - தேடியறியவேண்டும்‌. இந்தப்‌ பகுதிகள்‌ ஒருவரின்‌ உடல்வாகைப்‌


பொறுத்து வேறுபடும்‌. இவை உடலின்‌ எந்தப்‌ பகுதியாக வேண்டுமானாலும்‌ இருக்கலாம்‌. எனினும்‌, பெரும்பாலான மக்களுக்கு பொதுவான சில “கிளர்ச்சி மண்டலங்கள்‌: இருக்கின்றன. எடுத்துக்‌ காட்டாக ஆண்குறி, கிளிடோரிஸ்‌ (கந்து/மதனபீடம்‌) இரண்டும்‌ நுண்ணுணர்வுள்ள மண்டலங்களாகும்‌.



அதிக நுண்ணுணர்வு பகுதிகளுள்‌ காதுகள்‌, பிடரி, மார்பகங்கள்‌, மற்றும்‌ முலைக்காம்புகள்‌, தொடைகளின்‌ உட்பகுதி, முழங்கால்‌


பின்பகுதி, பிட்டம்‌, உள்ளங்கால்‌, கால்விரல்கள்‌, இயல்பாகவே ஆண்குறி மற்றும்‌ பெண்குறி ஆகியன அடங்கும்‌. இந்தப்‌ பகுதிகளை மென்மையாகப்‌ பிடித்துவிடுவதும்‌ நீவிக்கொடுப்பதும்‌ துணைவருக்குப்‌


பாலுணர்வுக்‌ கிளர்ச்சியூட்ட உதவும்‌. ஒருவர்‌ தம்‌ துணைவருக்கு இன்பம்‌ தருவது, இன்ஷா அல்லாஹ்‌ நற்கூலிக்குரிய ஒரு நற்செயல்‌ என்பதை மனதில்‌ வைத்துக்கொள்ளுங்கள்‌.


Comments