பாலுறுப்புக்களைத் தொடுவதும் கொஞ்சுவதும்:
துணைவரின் பாலுறுப்பைத் தொட்டு, நீவி, கொஞ்சுவதில் தவறேதுமில்லை. உண்மையில், முன்விளையாட்டின் ஒரு பகுதியாக தம்பதியர் ஒருவருக்கொருவர் பாலுறுப்புகளை நீவி விளையாடுவது ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
மனைவி கணவனின் ஆணுறுப்பைப் பிடிக்து நீவலாம், கணவன் அவள் பெண்குறியைத் தொட்டு வருடலாம். இவை, துணைவரை உடலுறவுக்கு
ஆயத்தமாக்குவதற்கு திறனுள்ளதொரு வழியாகும். இது விஷயமாகப் பெண்ணின் கந்துவை (கிளிடோரிஸ்) கிளர்ச்சியூட்டுவது முக்கியம்.
அது பெண்ணுடைய பிறப்புறுப்பில் பெண்குறியின் முன்பாகத்தில் உள்ள சிறிய நுண்ணுணர்வுமிக்க, நிமிர்வுபெறக்கூடிய ஒரு பகுதி. இதனால், ஆழ்ந்த பாலியல் இசைவு ஏற்படும்.
கைகொண்டு பரவசநிலை அடையச்செய்தல்:
கணவன் தன் கைகளையும் கைவிரல்களையும் பயன்படுத்தி மனைவியைப் பரவசநிலை
அடையச்செய்வதற்கு அனுமதியுண்டு. அதேபோல், மனைவியும் தன் கைகளால் கணவனைப் பரவசநிலை அடையச் செய்யலாம். குறிப்பாக, கணவன் இதை மனைவிக்குச் செய்துவிடுவது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பெண்களுக்குப் பரவசநிலையை அடைய கூடுதல் நேரம் பிடிக்கும்.
இமாம் இப்னு ஆபிதின் தம்முடைய ரத் அல்-முஹ்தாரில், தம்பதியருக்கிடையில் ஒருவருக்கொருவர் கைகளைக்கொண்டு பரவசநிலை அடைந்துகொள்வதைப் பற்றி கூறும்போது:
ஒருவர் திருப்திபெற அனுமதிக்கப்பட்ட ஒரு பொருளிலிருந்து - தன் துணைவரின் உடல் பாகத்திலிருந்து - தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்கிறார். ஆம், அவளின் முழு உடலவிலிருந்தும் அவர் பாலியல் திருப்தி பெறுவதற்கு உரிமையுண்டு. (ரத் அல்-முஹ்தார் அலா அல்-தூர் அல்-மு.ஃக்தார் 2:399)
Comments
Post a Comment