அழகுணர்வும் ஆபரணங்களும்.
மனைவியின் அலங்காரத்தில், அழகுபடுத்தலில் தங்கம், வெள்ளி மற்றும் இதரவகை ஆபரணங்கள் அணிவதும் அடங்கும்; முக ஒப்பனையும் உதட்டுச் சாயம் பூசுதலும் அடங்கும். கைகால்களுக்கு மருதாணி இட்டுக்கொள்வதும் - அவளுக்குப்
பிடித்தால், கண்களுக்கு மை அல்லது சுர்மா போட்டுக்கொள்வதும் - அவளின் அழகை அதிகரிக்கும். இவற்றை நபிவழி (சுன்னா) குறிப்பாக அனுமதித்துள்ளது. மேலும், கூந்தலை அழகாக சீவி, சீர்படுத்தி, பராமரிப்பது மூலம் அதையும் அவள் அலங்கரித்துக்கொள்ள வேண்டும். கூந்தலுக்குச் சாயம் பூசுவதற்கும் அனுமதியுண்டு. இதில், சாயத்தின்
உட்பொருள்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாக (ஹலால்) இருக்கவேண்டும்.
மேற்கூறப்பட்டதிலிருந்து, பெண் தன் கணவனுக்காகத் தன்னை அலங்கரித்துக்கொள்ளும் விஷயத்தில் பொதுவாக இஸ்லாம் பெரிய
அளவில் தடைகள் எதையும் விதிக்கவில்லை என்பது விளங்கும். ஆம், அலங்காரம்செய்வது மூலம் கணவன், மனைவி இருவரும் தங்கள் கற்பு ஒழுக்கத்தைப் பேணவும் விலக்கப்பட்டதைத் தவிர்க்கவும் இயலும்.
எனினும், ஒருவரின் உருவத்தையே திரிக்கக்கூடிய சில அலங்காரங்கள்” தடைசெய்யப்பட்டுள்ளன - அவை கணவனுக்காக வேண்டி செய்யப்பட்டாலும் சரியே. இதில் அழகுபடுத்கலுக்காகச் செய்யப்படும் அலங்கார அறுவைசிகிச்சை, புருவங்களை வடிவமைத்தல், பச்சை குத்துதல், காதுகள், மூக்கு தவிர்த்த உடலின் பிற பகுதிகளைக் குத்துதல், மனித ரோமத்தால் செய்யப்பட்ட சவுரி அல்லது செயற்கைத் தலைமுடி அணிதல் ஆகியவை அடங்கும். எனவே, இவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டும்.
உடல் உருவத்தை அழகாக வைத்துக்கொள்ளுதல். ஒரு பெண், தன்னைக் கச்சிகமாகவும் நல்ல வடிவிலும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுதல் கணவனுக்கு அவள் செய்யும் அலங்காரத்தின் ஒரு
பகுதியே ஆகும். மனைவி தன் உடல் உருவத்தையும் நன்கு கவனித்து, இயன்றளவு அதன் அழகைப் பராமரிப்பது அவசியம். இதன்மூலம்,
அவளுடைய உடலின்பால் கணவன் ஈர்க்கப்படுவது மட்டுமின்றி, அவள் தன் உடல்நலத்தையும் காத்துக்கொள்ள உதவும்.
Comments
Post a Comment