பாலியல் துணைக் கருவிகளையும் சாதனங்களையும் தம்பதிகள் உடலுறவின் போது பயன்படுத்தலாமா?
பாலியல் துணைக்கருவிகள் என்பது, தம்பதிகள் சாதனங்களைக் கொண்டு பரவசநிலையோ இதர பாலியல் செயல்பாடுகளில் தூண்டுதலுக்காக அல்லது பாலியல் கிளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவோ
அல்லது பரவசநிலை அடைவதற்காகவோ பயன்படுத்தப்படும் ஒரு பொருள்.
மிக அதிகமாக வழக்கில் உள்ள சில துணைக்கருவிகள்:
டில்டோ, வைப்ரேட்டர்ஸ், கிளிட்டோரஸ் கிளர்ச்சியூட்டிகள், நீட்சி ஆணுறைகள், பெண்குறி பந்துக்கள் மற்றும் பல்வேறு பசைகள், களிம்புகள்.
இன்று முஸ்லிம் தம்பதிகள் மத்தியில், உடலுறவுச் செயல்திறனை மேம்படுத்துவதற்காகப் பாலியல் துணைக்கருவிகளைப் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதுகுறித்து இஸ்லாமியரீதியாக சில விஷயங்களைக் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.
அ. ஒருவருக்கு சிரமத்தை ஏற்படுத்தினால் என்ன செய்வது?
ஒருவா் சுயதீங்கு விளைவித்துக்கொள்வதை ஷரீஆ அனுமதிப்பதில்லை. எனவே, பாலியல் துணைக்கருவிகள் தம்பதியர் இருவருள் ஒருவரை பாதித்தால் கூட அதற்கு அனுமதியில்லை. தம்பதியர் இருவருக்கும் அது எவ்விதத் தீங்கும் விளைவிக்காமல் இருப்பது அவசியம்.
ஆ. உயிரினங்களின் உருவத்தில் இருக்கலாமா?
சில பாலியல் துணைக் கருவிகள் உயிரினங்களின் உருவத்தில் இருக்கலாம். அவற்றுக்கு அனுமதியில்லை. ஏனெனில், உருவங்கள் செய்வது (தஸ்வீர்) விலக்கப்பட்டது.
இ. மசகுப் பொருட்களைப் பயன்படுத்தலாமா?
லூப்ரிகன்கள், லோஷன்கள், ஜெல்கள், க்ரீம்கள் ஆகியவற்றுக்கு தடையேதும் இல்லை. எனினும், அவை எவ்விதத் தீங்கும் ஏற்படுத்தக்கூடாது.
ஈ. வைப்ரேட்டர்களை கிளர்ச்சியூட்டுவதற்குப் பயன்படுத்தலாமா?
வைப்ரேட்டர் போன்ற சாதனத்தைப் பயன்படுத்தி பாலுறுப்புகளைகத் தவிர உடலின் பிற பகுதிகளையோ மனைவியுடைய கிளிட்டோரஸ் உள்பட பெண் குறியின் புறப் பகுதியையோ கிளர்ச்சியூட்டுவதற்கு தடையில்லை. இதற்கு நிபந்தனை, அதை அவருடைய துணைவர் செய்துவிட வேண்டும்; மேலும், துணைவரைக் கொண்டு சாதனங்களைப் பயன்படுத்துவதால் அது ஒருவர் தனியாக இருக்கும்பொழுதும் பயன்படுத்த வழிவகுக்கும் என அஞ்சினால், அவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
பாலியல் சாதனங்களைப் பயன்படுத்துவது உறவில் பாதிப்புகள் ஏற்படுத்தலாம். ஆண் சோம்பேறித்தனம் அடைந்துவிடலாம். கணவன் - மனைவி இடையே இயற்கையான உடலுறவில் ஏற்படும் இன்ப உறவை
அது தடுக்கலாம். மனைவி, தன் கணவன் இயற்கையாகத் தன்னைத் திருப்திப்படுத்த தகுதியற்றவன் எனக் கருதி அவர்மீது மரியாதை இழக்கலாம். ஆக, பாலியல் கருவிகளை மொத்தமாகச் தவிர்ப்பது மிகச் சிறந்தது - அது உறவுகளை மெருகூட்டும் நோக்கில் செய்யப்பட்டாலும் கூட. விதிவிலக்காக கணவன் நிரந்தர ஆண்குறி விறைப்புத்தன்மையின்மை, நாட்பட்ட நோய்கள், விபத்துக்கள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு மனைவியை தன் ஆண்குறி கொண்டு திருப்திப்படுத்த முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்கள் தவிர. மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மனைவி விரும்பினால் கணவனிடமிருந்து விவாகரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
Comments
Post a Comment