மனைவி தயாராதல்:
1. சுத்தமும் தற்சுகாதாரமும்:
சுத்தமும் (நழாஃபா) தூய்மையும் (தஹாரா) தற்சுகாதாரமும் இஸ்லாத்தில் அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள். தூய்மையே தொழுகைக்குத் திறவுகோல். தொழுகை, ஒரு முஸ்லிமின் வாழ்வில் முதன்மையான செயல். மேலும், தூய்மை அல்லாஹ்வின் அன்பை ஒருவருக்குப் பெற்றுத்தருகிறது. அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக, அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருபவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்; தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும் தூய்மையாளர்களையும் நேசிக்கின்றான். (குர்ஆன் 2:222)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூமாலிக் அல்-அஷ்அரி (ரழி) அறிவிக்கிறார்:
துரய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்... (சஹீஸ் முஸ்விம் 284)
எனவே, ஓர் இறைநம்பிக்கையாளர் எல்லா நேரங்களிலும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கவேண்டும். இதை, தன் மணவாழ்வில் இன்னும் உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும்.
வீட்டில் கணவர் இருக்கும்போது அவருக்கு எதிரில் அழகாகவும் தூய்மையாகவும் இருக்கவேண்டுமே எனும் உணர்வே பெண்களில் சிலருக்கு இருப்பதில்லை. அதேவேளை, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அல்லது நண்பர்களைக் காணச்செல்லும் போது தங்களைத் தூய்மைப்படுத்தி அலங்கரித்துக்கொள்வதில் கவனமாக
இருக்கின்றனர். வேறுசிலர், திருமணம் ஆகுமுன் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் பெரிதும் அக்கறை காட்டுவார்கள். ஆனால், தங்கள் மணவாளனைத் தேர்ந்தெடுத்து மணம்முடித்தபின், இந்த முக்கியமான அம்சத்தில் அலட்சியம் காட்டுவார்கள்.
உண்மையில் இது இஸ்லாமிய போதனைகளுக்குப் புறம்பானது. மனைவி முதலில் தன் கணவனுக்காகவே தன்னை அலங்கரித்துக் கொள்ளவேண்டும். இதற்காக அவளுக்கு நற்கூலியும் அளிக்கப்படுகிறது. மஹ்ரம் அல்லாத (குடும்பத்தார் அல்லாத) ஆண்களின் கவனத்தைக் கவர்வதற்கு அழகுபடுத்திக்கொள்வது முழுக்க முழுக்க விலக்கப்பட்டதும் பெரும்பாவமும் ஆகும். அவள் வீட்டில் தன் கணவன்முன் இயன்றளவு மிக அழகாகவும் தூய்மையாகவும் இருப்பது அவசியம். வீட்டுவேலைகள் காரணமாக அவள் அலங்கோலமாக இருப்பின், வேலை முடிந்ததும் தன்னைத் தூய்மை செய்துகொள்ள வேண்டும், தன் வேலை முடிந்து நீண்டநேரம் ஆகியும் அலங்கோலமாகவே திரிவது அவளுக்கு உகந்ததல்ல.
ஆரோக்கியமான உடலுறவுக்கு, கசப்புணர்வோ தொந்தரவோ ஏற்படுத்தக்கூடிய அனைத்தையும் தவிர்க்கவேண்டும். மனைவி, வாய் நாற்றம் அல்லது வேறுவித உடல்நாற்றமின்றி இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், இது ‘ஆசையைக் கெடுக்கும்' முக்கிய விஷயமாக அமையக்கூடும்.
வாய்நாற்றம் அடித்தால், அவர்கள் பள்ளிவாசலுள் நுழைவதைக்கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடுத்துள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கிறார்:
“பூண்டு அல்லது வெங்காயம் உண்டவர்கள் எம்மிடம் வரக்கூடாது” அல்லது, இப்படிக் கூறினார்: “அவர் நம் பள்ளிவாசலுக்கு வரவேண்டாம். தன் வீட்டிலேயே இருந்துகொள்ளட்டும்...' (சஹீஹ் அல்-புஹாரி 877)
அல்லாஹ்வின் தூதா் (ஸல்) கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கிறார்:
எவர் இந்தச் செடியை, அதாவது பூண்டை, உண்டாரோ - இன்னொருமுறை, 'எவர் வெங்காயமும் பூண்டும் சமையற்பூண்டும் உண்டாரோ” எனக் கூறினார்கள் அவர் நம் பள்ளிவாசலுக்கு வரவேண்டாம். ஏனெனில், ஆதமின் மக்கள் பாதிக்கப்படும் அதே பொருள்களினால் வானவர்களும் பாதிக்கப்படுகின்றனர். (சஹீஹ் முஸ்லிம் 564)
துர்நாற்றம் மனிதர்கள், வானவர்கள் இரு சாராரையும் பாதிக்கின்றது என்பதை மேற்கூறிய நபிமொழி காட்டுகிறது. எனில், ஒருவர் தன் துணைவருக்குத் தீங்கிழைக்காமல் தவிர்ந்திருப்பது இதைவிட
முக்கியமானது என்பதன் காரணங்களைக் குறிப்பிடத் தேவையில்லை. எனவே, மனைவி என்பவள் அழுக்கு, அசுத்தம், வாய்நாற்றம், உடல் நாற்றம் அனைத்தையும் தவிர்ப்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.
பற்களை இயன்றளவு அடிக்கடி துலக்கி வாய் சுத்தம் பேணவேண்டும். இதன்மூலம், முத்தமிடும்வேளை துணைவருக்குப் பாதிப்புவராமல் காக்கமுடியும், அவள் எப்பொழுதுமே தன் கணவன் முன் தான்
தூய்மையாக இருப்பதில் ஆர்வமும் அக்கறையும்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு உடல்நாற்றம் தொடர்பாக உண்மையில் பிரச்சினை உள்ளதென்றால், அவர் மருத்துவ சிசிச்சையை நாடவேண்டும். இந்த நிலைமையை சீர்செய்ய பல எளிய, திறனுள்ள சிகிச்சைகள் உள்ளன. பொதுவாக, உடல் நாற்றத்துக்கு மருத்துவ நோய்க்குறி சோதனை அவசியமில்லை. எனினும், சரிசெய்யும் முயற்சிகளையும் மீறி அது தொடர்ந்து நீடித்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது .
Comments
Post a Comment