வசீகரிக்கும்‌ ஆடையணிதல்‌.

 


வசீகரிக்கும்‌ ஆடையணிதல்‌. 



ஒரு பெண்‌ தன்‌ கணவனுடன்‌ உடலுறவு


கொள்வதற்காக கவர்ச்சியான, வசீகரமான, வெளிக்காட்டக்கூடிய உடை அணிந்து அலங்கரித்துக்கொள்வதில்‌ தவறேதுமில்லை. உல்லாச சின்ன உள்ளாடை, மயக்கும்‌ உள்ளாடை, பிகினி, டூ பீஸ் போன்றவற்றை அணிவது


மார்க்க ஒழுங்குக்கும்‌ (அதப்) நாணத்துக்கும்‌ (ஹயா) எதிரானதல்ல. இதற்கான நிபந்தனை, அது கணவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்‌; அந்தக்‌ கோலத்தில்‌ எந்த மூன்றாவது ஆளும்‌ தம்பதியருடன்‌


இருக்கக்கூடாது. உண்மையில்‌, நாம்‌ ஏற்கனவே கூறியதுபோல, தன்னுடைய கற்பையும்‌ தன்‌ கணவனின்‌ கற்பையும்‌ காக்க உதவுவதே


இதன்‌ நோக்கமாக இருப்பின்‌, அவளுக்கு நற்கூலி கிடைக்கும்‌, இன்ஷா அல்லாஹ்‌.



‌மேலே கூறப்பட்ட உடைபற்றிய


குறிப்புகளை அவள்‌ தன்‌ கணவனின்‌ முன்னிலையில்‌ மட்டும்தான்‌, அதுவும்‌ படுக்கையறை சூழலில்தான்‌, பின்பற்ற வேண்டும்‌.


நறுமணம்‌. 



இதமான வாசனை பிறர்மீது குறிப்பிடத்தக்க தாக்கம்‌ ஏற்படுத்தலாம்‌. அருமையான நறுமணங்கள்‌ மனதுக்கு இதமளிக்கக்‌ கூடியன. வாசனைத்‌ திரவியங்களைப்‌ பூசி மகிழ்வது மனித இயற்கையின்‌ (பிஃத்ரா) ஒரு பகுதியாகும்‌. இதனால்தான்‌, நறுமணம்‌ பூசும்‌ வழக்கத்தை அல்லாஹ்வின்‌ தூதர்கள்‌ அனைவரும்‌ பின்பற்றியிருந்தனார்‌. அல்லாஹ்வின்‌


துரதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூ அய்யூப்‌ (ரலி) அறிவிக்கிறார்‌: .



நான்கு விஷயங்கள்‌ நபிமார்களின்‌ வழிகளைச்‌ சேர்ந்தவை: நாணம்‌, நறுமணம்‌ பூசுதல்‌, பல்துலக்கியைப்‌ (சிவாக்‌) பயன்படுத்தல்‌, திருமணம்‌ முடித்தல்‌ . (சுனன்‌ அல்‌-திர்மிதீ 1080)



அல்லாஹ்வின்‌ அன்புத்‌ தூதர்‌ (ஸல்‌) நறுமணப்‌ பொருட்களை நேசித்தார்கள்‌. அனஸ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌: அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) நறுமணப்‌ பொருளை மறுக்கமாட்டார்கள்‌.


(சஹீஹ்‌ அல்‌-புஹாரி 5585)



அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்‌:


ரப்ஹான் (நறுமணப்‌ பொருள்‌) வழங்கப்படும்போது எவரும்‌ அதை மறுக்கக்‌ கூடாது. அது மென்மையான, அருமையான நறுமணம்‌ கொண்டது. (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 2253)



ஆண்கள்‌ வெள்ளிக்கிழமை, ஈத்‌ (பெருநாள்‌) போன்ற பொது நிகழ்ச்சிகளுக்குச்‌ செல்லும்பொழுது நறுமணம்‌ பூசுவது விரும்பத்தக்கது எனும்‌ விஷயம்‌ பல நபிமொழிகள்‌ வாயிலாக ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம்‌ இதமான நறுமணம்ப பூசிக்கொள்வதன்‌ மூலம்‌ பிறருக்கு நலன்‌ பயக்கிறார்‌. இந்தக்‌ கருத்துச்சூழலில்தான்‌, நறுமணம்‌ பூசுவது அறச்செயலாகக்‌ கருதப்படுகிறது.



இயல்பாகவே, நறுமணப்‌ பொருள்கள்‌ உடலுறவுச்‌ செயல்பாடுகளில்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கின்றன. இதமான மணம்‌ பாலுறவு வேட்கையைத்‌ தூண்டி, இன்ப சுகத்தையும்‌ செயல்திறனையும்‌, அதிகரிக்கும்‌. எனவே, மனைவி தன்‌ கணவனுடன்‌ உடலுறவு கொள்வதற்கான அலங்கரிப்பின்‌ ஒரு பகுதியாக நறுமணம்‌ பூசிக்கொள்ள முயலவேண்டும்‌. அவள்‌ தனக்கு மிகப்‌ பொருத்தமான, தன்‌ கணவனை


மகிழ்விக்கக்கூடிய நறுமணப்‌ பொருளைக்‌ தெரிவுசெய்துகொள்ள வேண்டும்‌. அது, அவளின்‌ உடல்‌ அல்லது உடையில்‌ உள்ள எந்தவொரு


துர்நாற்றத்தையும்‌ போக்க உதவும்‌.



எனினும் பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு வெளியில்‌ செல்ல அனுமதியில்லை. 



இதை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌), மிக ஆதாரப்பூர்வமான (சஹீஹ்‌) ஹதீஸ்களில்‌ திட்டவட்டமாகத்‌ தடுத்துள்ளார்‌. அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூமூஸா (ரழி) அறிவிக்கிறார்‌:



“ஒரு பெண்‌ நறுமணம்‌ பூசிக்கொண்டு, ஓர்‌ (ஆண்கள்‌) குழுவைச்‌ கடந்து செல்கையில்‌, அவர்கள்‌ அவளுடைய நறுமணப்‌ பொருளின்‌ வாசனையை


நுகர்வார்களெனில்‌, அவள்‌ அப்படிப்பட்டவளாவாள்‌...' (மேலும்‌, ) “அவர்கள்‌ (ஸல்‌) கடுமையான சொற்களைப்‌ பயன்படுத்தினார்கள்‌ என அறிவிப்பாளர்‌


கூறுகிறார்‌.” (சுனன்‌ அபூ தாவூத்‌ 4170)



எனவே, மனைவி வீட்டினுள்‌ இருக்கும்போது மட்டுமே நறுமணம்‌ பூசிக்கொள்ளலாம்‌.


Comments