மலப்பாதையில் உடலுறவு செய்யலாமா ?
மலத் துவாரத்தில் உடலுறவு கொள்வதை பின்வரும் ஹதீஸ்கள் கடுமையாகக் கண்டிக்கின்றன. எனவே இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட(ஹராமான) செயல் ஆகும்
யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூதாவூத் 2162
யார் ஆணிடமோ, அல்லது பெண்ணிடமோ மலத் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 1165
இதுபோன்ற மேலும் பல ஆதாரங்களிலிருந்து, ஒருவர் தம் மனைவியுடன் ஆசனவாய் மூலமாக உறவுகொள்வதற்கு அனுமதியில்லை என்பது தெளிவாகிறது. இது மட்டுமின்றி, ஆசனவாய் உறவு தேவை யற்ற வலி ஏற்படுத்துகிறது. மேலும், இன்றைய ஒழுக்கங்கெட்ட சமுதாயத்தில் பரவியுள்ள பல நோய்களின் ஊற்றாக இருக்கிறது.
எனவே, கணவன் தன் மனைவியின் ஆசனவாயில் புணர்தல் விலக்கப்பட்ட, பாவமான செயலாகும். எனினும், இயல்பு நிலையில், ஆசனவாயின் சுற்றுப் புறத்தையும் வெளிப்பகுதியையும் தொடுவதற்கு
அனுமதியுண்டு. மேலும், அவளுடைய பிட்டத்திற்கு இடையில் அல்லது கச்சைப்பகுதியில் ஆண்குறியை வைத்துத் தேய்ப்பதற்கும்கூட. அனுமதியுண்டு. ஓரே நிபந்தனை, அவளின் ஆசனவாயினுள் புணரக்கூடாது;
மேலும் பின் பாகங்களில் அசுத்தமாக இருக்கக்கூடாது. கணவன் தன் மனைவி உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தொட்டுப்
பிடித்துப் பிசைய, நீவ அனுமதியுண்டு. இதில் ஆசனவாயின் புறப்பகுதியும் அடங்கும். எனினும், அவர் ஆசனவாயினுள் புணர்வதை உறுதியாகத் தவிர்க்க இயன்றாலே இதற்கு அனுமதியுண்டு. இல்லாவிட்டால்,
அவர் அந்தப் பகுதியிலிருந்து முற்றிலும் தவிர்ந்திருப்பது அவசியம்.
Comments
Post a Comment