உடலுறவில் ஏற்படும் ஓசைகளை மற்றவர்கள் கேட்கலாமா?
தம்பதியர், தங்கள் உடலுறவுச் செயல்பாட்டைப் பிறர் காதில் விழாத வண்ணம் மறைப்பதில் கவனமாக இருக்கவேண்டும். உடலுறவின்போது பிறர் செவியுறும் அளவுக்கு சப்தம் போடுவதை கணவன், மனைவி இருவரும் தவிர்க்கவேண்டும். தம்பதியர்
அளவுக்கதிகமாகப் பேசுவதிலிருந்தும் அதிக சப்தம் போடுவதிலிருந்தும் தவிர்ந்திருப்பது உடலுறவு ஒழுங்கின் ஒரு பகுதியாகும். அதுவும், அடுத்த அறையில் பெற்றோர்கள் போன்ற பிறர் இருக்கும் நிலையில் இது மென்மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. சில தம்பதியர், தங்கள்
உடலுறவைத் தங்கள் குடும்பத்தினரோ அக்கம் பக்கத்தினரோ செவியுறுவது பற்றிக் கவலைப்படுவதில்லை. இது பாவச்செயல் மட்டுமின்றி, அவர்களின் கண்ணியக்குறைவான நடத்தையையும் காட்டுகிறது. உடலுறவின்போது முயன்றும் சப்தத்தைக் கட்டுப்படுத்தவியலாத
தம்பதியர், பிறர் அருகில் இருக்கும்போது உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது அவசியம். பிறர் செவியுறாத இடத்திற்குச் சென்று அதில் ஈடுபடுவதற்கான வழிதேடிக்கொள்ள வேண்டும். பார்வையற்ற ஒருவர்
இருக்கும் இடத்தில் உடலுறவு கொள்வதுகூட விலக்கப்பட்டது; ஏனெனில், அதை அவரால் கேட்க முடியும் எனச் சட்டவியலாளர்கள்
கூறுகின்றனர். (காண்க: ரத் அல்-முஹ்தார் 8:208 மற்றும் அல்- முக்னி 8:145)
Comments
Post a Comment