ஒரே சமயத்தில் இரு மனைவிகளிடம் உடலுறவு கொள்ளுதல்:
இரு மனைவி உடைய ஓர் ஆண், அவர்கள் இருவருடனும் ஒரே நேரத்தில் - அதாவது, முத்தரப்பாக(த்ரீஸம்) - உடலுறவுகொள்வது அல்லது ஒரு மனைவியின் முன்னிலையில் மற்றவளுடன் உடலுறவுகொள்வது விலக்கப்பட்டது. இச்செயலுக்கு அவர்களிருவரும் ஒப்புதல் அளித்தாலும் கூட அனுமதியில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன;
முதலாவதாக, ஒரு பெண் இன்னொருத்தியின் மறைவிடங்களைப் (அவ்ரா) பார்ப்பதற்கு அனுமதியில்லை. அது அவளுடைய சகக்
கிழத்தியாய் இருப்பினும் சரி. பிற முஸ்லிம் பெண்களின் முன்னிலையில் ஒரு முஸ்லிம் பெண் தன்னுடைய அவ்ராவை- அதாவது தொப்புள் முதல் முழங்கால் வரையுள்ள பகுதிகளை - மறைத்தாகவேண்டும். (அல்-ஹிதாயா 4:461) மேலே குறிப்பிட்ட ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: '...ஒரு பெண் இன்னொரு பெண்ணின் மறைவான பகுதியைப் (அவ்ரா) பார்க்கக்கூடாது. ' (சுனன் அல்-திர்மிதி 2793) இதில், சகக்கிழத்திக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையில் நபியவர்கள் (ஸல்) வேறுபாடு காட்டவில்லை.
இரண்டாவதாக, உடலுறவில் ஈடுபடும் இருவருக்குள் அது இரகசியமாக வைக்கப்படவேண்டும். கணவன், மனைவி தங்கள் உடலுறவுச் செயல்பாட்டின் விவரங்களைப் பிறருடன் கலந்துரையாடுவதை
இஸ்லாம் தடுத்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே நாம் மேற்கோளிட்ட ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறு கூறுகிறார்கள்: 'தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வின் பார்வையில் மனிதர்களிலேயே மிகக் கொடியவர் யாரெனில், அந்த மனிதர் தம் மனைவியுடன் உடலுறவுகொண்டு அவளும் அவருடன் உடலுறவு கொண்டு விட்ட பின் அவளின் இரகசியத்தை வெளிப்படுத்துபவர். ' (சஹிஹ்
முஸ்லிம் 1487) ஒருவர் தம் உடலுறவுச் செயல்பாட்டின் விவரங்களை வெளிப்படுத்துவதைவிட, இன்னொருவர் இருக்கும் நிலையில் உடலுறவு கொள்வது நேரடியானதொரு விஷயம் என்பதால், அந்தச்
செயல் விலக்கப்பட்டதும் பாவமானதுமாகும்.
இமாம் இப்னு குதாமா தம்முடைய அல்-முக்னியில் கூறுகிறார்: 'இரு மனைவிகளுள் ஒருத்தி
தன் கணவனுடன் உடலுறவுகொள்ள, மற்றவள் அதைப் பார்த்து இரசிப்பது என இருவரும் உடன்பாடு செய்துகொண்டாலும்கூட அதற்கு அனுமதியில்லை. ஏனெனில், அது ஒழுக்கங்கெட்ட, மடத்தனமான, மரியாதை உணர்வையே (முரூஆ) நீக்கிவிடக்கூடிய ஒரு செயல், எனவே, அவர்கள் இசைவு தெரிவித்தாலும்கூட இதற்கு அனுமதியில்லை.' (அல்-முக்னி 8:137. மேலும் பார்க்க: முக்னி அல்-முஹ்தாஜ் 3:234 மற்றும் ஷரஹ் அல்-குர்ஷீ அலா மூஃக்தஸர்
அல்-ஃகலீல் 4:6)
Comments
Post a Comment