உடலுறவுக்குத்‌ தயாராதல்‌ :


 உடலுறவுக்குத்‌ தயாராதல்‌ :



ஆரோக்கியமான உடலுறவைப்‌ பராமரிப்பதற்கு, உளரீதியாகவும்‌ உடல்ரீதியாகவும்‌ தயாராகுதல்‌ அதன்‌ நீடிப்புக்கு முக்கியமானது.உடலுறவுக்குத்‌ தயாராகுதல்‌, புணர்ச்சிக்கு நிகராக முக்கியம்‌ பெற்றுள்ளது. இருபாலரும்‌ தங்களைத்‌ தயாராக்கிக்கொள்வதில்‌ கவனமாக இருப்பது மூலம்‌, தங்கள்‌ இணைவில்‌ முழுமையான இன்பம்‌ காணலாம்‌. இந்த விஷயத்தில்‌ அசட்டையாக இருப்பது,


விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்‌.



அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தம்‌ மனைவிமார்களின்‌ வீடுகளுக்குள்‌ நுழையும்போது, தம்‌ வாயையும்‌ பற்களையும்‌ பல்துலக்கி (சிவாக்‌) கொண்டு சுத்தம்செய்வது வழக்கம்‌. ஷுரைஹ்‌ இப்னு ஹானி அறிவிக்கிறார்‌:



அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தம்‌ வீட்டினுள்‌ நுழைந்ததும்‌ முதலில்‌ என்ன செய்தார்கள்‌! என்று நான்‌ ஆயிஷாவிடம்‌ வினவினேன்‌. “சிவாக்கைப்‌


பயன்படுத்துவார்கள்‌' என அவர்‌ பதிலளித்தார்‌.” (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 253)



நீண்ட பயணங்களிலிருந்து திரும்பி வருகையில்‌ அல்லாஹ்வின்‌ தூதரும்‌ அவருடைய தோழர்களும்‌ இரவு நேரத்தில்‌ தங்களுடைய வீடுகளுக்குள்‌ எதிர்பாராவிதமாக நுழையமாட்டார்கள்‌. மாறாக,


தங்கள்‌ மனைவிகளுக்கு முன்கூட்டியே செய்தியனுப்பி, அவர்கள்‌ தங்கள்‌ கணவர்களுக்குத்‌ தயாராகவிருக்க அவகாசம்‌ அளிப்பார்கள்‌.



நாங்கள்‌ அல்லாஹ்வின்‌ தூதருடன்‌ ஒரு போர்‌ நடவடிக்கைக்குச்‌ சென்றிருந்தோம்‌. நாங்கள்‌ மதீனாவுக்குத்‌ திரும்பியபோது, எங்கள்‌ வீடுகளுக்குச்‌ செல்ல நாடினோம்‌. அப்போது நபியவர்கள்‌ (ஸல்‌) கூறினார்கள்‌: “மாலையில்‌ பின்நேரம்வரை காத்திருந்து (வீடுகளுக்குச்‌) செல்லவும்‌.


இதன்‌ மூலம்‌, கலைந்த தலையுடன்‌ இருக்கும்‌ பெண்‌ தன்‌ கூந்தலைச்‌ சீவி சரி செய்து கொள்வாள்‌; தன்‌ கணவன்‌ உடன்‌ இல்லாத நிலையில்‌ உள்ள


பெண்‌ தன்‌ பருவ முடிகளை மழித்துக்கொள்வாள்‌. ” (சஹீஹ்‌ அல்‌-புஹாரி 4949 மற்றும்‌ சஹீஹ்‌ மூஸ்லிம்‌ 1928, இங்கு முஸ்லிமில்‌ உள்ள சொற்களே இடம்‌


பெற்றுள்ளன.)



அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக ஜாபிர்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:



உங்களில்‌ ஒருவா்‌ (பயணத்திலிருந்து மீண்டு) இரவுநேரத்தில்‌ வரும்‌ பொழுது, அவர்‌ தன்‌ குடும்பத்தாரிடம்‌ ஒர்‌ இரவு-விருந்தாளியாகச்‌ செல்லக்‌ கூடாது. (மாறாக சற்று தாமதிப்பது மூலம்‌) கணவன்‌ வீட்டிலில்லாத பெண்‌ தன்‌ பருவ முடிகளை மழிக்துக்கொள்ளவும்‌, கலைந்த தலையுடன்‌


இருக்கும்‌ பெண்‌ தன்‌ கூந்தலைச்‌ சீவி சரிசெய்துகொள்ளவும்‌ இயலும்‌.


(சஹிஹ்‌ அல்‌- புஹாரி, 4948 மற்றும்‌ சஹிஹ்‌ முஸ்லிம்‌ 1928, இங்கு முஸ்லிமில்‌ உள்ள சொற்களே இடம்பெற்றுள்ளன)



இமாம்‌ அபுல்‌ ஃபராஜ்‌ இப்னு அல்‌-ஜவ்ஸி தம்முடைய ஸைத்‌ அல்‌-ஃகாதிரில்‌ இவ்வாறு கூறுகிறார்‌. அதாவது, தம்பதிகள்‌ உடலுறவுக்‌கென பகலிலோ இரவிலோ குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துக்‌ கொள்ளவேண்டும்‌. இதன்‌ மூலம்‌ இருவரும்‌ உடல்‌, உளரீதியாக தயார்நிலையில்‌ இருக்கவியலும்‌. இது அவர்களின்‌ இன்ப சுகத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, அவர்களில்‌ ஒருவர்‌ உடல்‌ அல்லது உள ரீதியாகத்‌ தயாரின்றி இருக்கும்‌ சாத்தியத்தையும்‌ அகற்றிவிடும்‌. (ஸைத் அல்‌-ஃகாதிர்‌. ப.280)


Comments