சிறுநீர்‌ விளையாட்டு:

 


சிறுநீர்‌ விளையாட்டு:



சிறுநீர்‌ விளையாட்டு என்பது ஒரு விநோதமான பாலியல்‌ மூடக்‌ களியாட்டமாகும்‌. இதில்‌ ஈடுபடுபவர்கள்‌ மூத்திரத்திலிருந்தும்‌ மூத்திரம்‌ அடிப்பதிலிருந்தும்‌ இன்பம்‌ பெறுகின்றனர்‌. இது தம்பதியரில்‌ ஒருவர்‌ மற்றவர்‌ மீது 'பொன்‌ மழை: பெய்யும்‌ ஒருவகை பாலியல்‌ முன்விளையாட்டு. சிலர்‌ தம்‌ துணைவரின்‌ மூத்திரத்தைக்‌ குடிக்கும்‌


அளவிற்குச்‌ செல்கின்றனர்‌!



சிறுநீர்‌, மலம்‌, அசிங்கம்‌ போன்றவற்றிலிருந்து சுகம்‌ பெறுவது, நல்ல இயல்பான நிலையில்‌ உள்ள மனிதரால்‌ கற்பனைகூட செய்து பார்க்கவியலாத ஓர்‌ அபத்தமாகும்‌. அது ஒரு நோய்‌; வழிகெட்டுப்‌போன ஒரு மூடக்‌ களியாட்டம்‌. அதற்கு ஒருபோதும்‌ இஸ்லாத்தில்‌ அனுமதியில்லை. தூய்மையும்‌ பரிசுத்தமும்‌ (தஹாரா) இஸ்லாத்தின்‌


அடிப்படைகளாகும்‌. நபிமொழி திரட்டுகளும்‌ சட்ட (ஃபிச்ஹு) நூல்களும்‌, அசிங்கத்தைக்‌ தவிர்க்கும்‌ விதிகள்கொண்ட பக்கங்களால்‌ நிரம்பியுள்ளன. கிட்டத்தட்ட ஓவ்வொரு ஹதீஸ்‌ நூலிலும்‌ பிக்ஹு நூலிலும்‌ அலசப்படும்‌ முதல்‌ விஷயம்‌, தஹாராதான்‌. தூய்மை இறைநம்பிக்கையின்‌ பாதியாகும்‌; தொழுகையின்‌ திறவுகோலாகும்‌. இறை


நம்பிக்கையாளர்‌ தூய்மையாக இருந்து, தூய்மையை நேசித்து, அசுத்தத்தையும்‌ அசிங்கத்தையும்‌ தவிர்க்கவும்‌ வெறுக்கவும்‌ வேண்டும்‌.



எனவே, ஒருவர்‌ தம்‌ துணைவரின்‌ மீது மூத்திரம்‌ அடிப்பதை முன்‌ விளையாட்டின்‌ ஒரு பகுதியாகச்‌ செய்வதற்கு அனுமதி இல்லை. அது பாவமானது என்பதில்‌ எவ்விதச்‌ சந்தேகமுமில்லை. சிறுநீர்‌ தெறித்தலைத்‌ தவிர்க்காமல்‌ இருப்பது மண்ணறையின்‌ தண்டனைக்கு ஒரு காரணமாகும்‌.



அப்துல்லாஹ்‌ இப்னு அப்பாஸ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:



ஒருமுறை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) இரண்டு மண்ணறைகளைக்‌ கடந்து சென்றபோது, '(மண்ணறையில்‌ உள்ள) இவர்கள்‌ வேதனை செய்யப்படுவது, தவிர்க்கவேண்டிய பெரிய விஷயங்களுக்காக அல்ல” என்று கூறிவிட்டு, ஆம்‌


(பெரிய பாவங்களுக்காகத்தான்‌ வேதனை செய்யப்படுகிறார்கள்‌), ஒருவர்‌ அவதூறு பேசிக்கொண்டு திரிபவர்‌, மற்றவர்‌ சிறுநீர்த்‌ துளிகள்‌ தெறிப்பதிலிருந்து தன்னை ஒருபோதும்‌ காத்துக்கொள்ளாதவர்‌” என்று சேர்த்துச்‌ சொன்னார்கள்‌. இப்னு அப்பாஸ்‌ கூறுகிறார்‌: அடுத்து நபியவர்கள்‌ (ஸல்‌) ஒரு ஈரமான பச்சை இலையை எடுத்து இரண்டு துண்டுகளாகக்‌ கிழித்து, மண்ணறை


ஓவ்வொன்றின்‌ மீதும்‌ ஒரு துண்டை வைத்துக்‌ கூறினார்கள்‌. 'இவ்விரு துண்டுகளும்‌ உலரும்வரை அவர்களின்‌ வேதனை குறையட்டுமாக.



அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்‌:



சிறுநீர்த்‌ துளிகள்‌ தெறிப்பதைத்‌ தவிர்த்துக்கொள்ளுங்கள்‌. ஏனெனில்‌, பொதுவாக மண்ணறை வேதனை அதன்‌ விளைவாகவே ஏற்படுகிறது. (சுனன்‌ அல்‌-தாரகுத்னி 1:128)



எனவே அசிங்கத்தைக்‌ தவிர்ப்பது கட்டாயக்‌ கடமையாகும்‌. மலஜலம்‌ கழித்தபின்‌ ஒருவர்‌ அசிங்கத்தை சுத்தம்செய்தல்‌ போன்ற தேவைகள்‌ மட்டுமே இதற்கு விதிவிலக்கு. மூத்திரம்‌ விஷயத்தில்‌, இது கூடுதல்‌ முக்கியத்துவம்‌ பெறுகிறது. ஏனெனில்‌, அது திட்டவட்டமான அசிங்கமும்‌ அசுத்தமும்‌ ஆகும்‌. ஒருவர்‌, பொதுவாக அங்கத்தையும்‌ குறிப்பாக மூத்திரத்தையும்‌ அப்பிக்கொள்வதைக்‌ தவிர்க்கவேண்டும்‌.


Comments