தம்பதியினரிடையே தொலைபேசி வழிப் பாலுறவு:
“தொலைபேசிப் பாலுறவு” என்பது, இருவர் ஒருவரையொருவர் பாலியல் ரீதியாகத் தூண்டுவதற்குத் தொலைபேசி மூலம் உரையாடுவது. தொலைபேசி உரையாடலின் போது, தற்புணர்ச்சி செய்துகொள்வது நோக்கமல்ல; வெறுமனே தம்பதியர் நெருக்கவுணர்வுக்காக மட்டுமே
குலாவுகின்றனர் என்றால், அதற்கு அனுமதியுண்டு. இதுபோன்ற நெருக்கமான உரையாடலில் தவறேதுமில்லை. தம்பதியர் ஒரே இடத்தில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் இது ஆகுமானதே. ஒரே நிபந்தனை, தற்புணர்ச்சி அல்லது பிற விலக்கப்பட்ட செயல்கள் நடந்துவிடும் அச்சம் இருக்கக்கூடாது. எனினும், துணைவருடன் நெருக்கமாகப் பேசுவதாலேயே புணர்ச்சிப் பரவசம் (ஆர்கஸம்) ஏற்பட்டால் அது விலக்கப்பட்ட செயல்களின் வட்டத்துக்குள் வராது.
புணர்ச்சிக்குப்பின்
பாலுறவு குறித்த இஸ்லாமிய போதனைகள், தம்பதியரின் புணர்ச்சியோடு முடிந்துவிடுவதில்லை. அதையும் தாண்டிச் செல்கிறது. 'புணர்ச்சிக்குப்பின்’ அல்லது 'பின்விளையாட்டு' என அழைக்கப்படக்
கூடிய புணர்ச்சிக்குப் பிந்தைய நிலை, முன்விளையாட்டு மற்றும் புணர்ச்சி போன்றே முக்கியமானது. இது விஷயத்தில், பல முக்கிய
விதிகளையும் ஒழுங்குகளையும் மனத்தில் நிறுத்துவது அவசியம்.
1. பாசத்துடன் இருத்தல்
உடலுறவில் உச்சநிலை (பரவசநிலை) அடைந்தபின், தம்பதியர் இருவரும் அதே நிலையில் சிறிது நேரம் இருந்துவிட்டு, பின்னர் பிரிய வேண்டும். தம்பதியர், உடலுறவின் போது மட்டுமல்லாமல் எல்லா வேளைகளிலும் ஒருவருக்கொருவர் தாராளமாகவும் அன்போடும் பாசத்தோடும் இருக்குமாறு இஸ்லாம் போதிக்கிறது. புணர்ச்சிக்குப்பின் நுண்ணுணர்வும் மறுவினையும் இல்லாமல் கணவன் இருந்தால், அவன் தன்னுடைய இச்சை தணிப்புக்கு மட்டும்தான் தன்மீது ஆர்வம் கொண்டிருந்தான் என்பதுபோல மனைவிக்குத் தோன்றும். எனவே, புணர்ச்சிக்குப் பின்னரும்கூட, அன்பையும் பாசத்தையும் பரிமாறிக்
கொள்ளுதல் வேண்டும்.
2. தூய்மையும் சுத்தம் செய்துகொள்வதும்
புணர்ச்சிக்குப்பின் தம்பதியர் இருவரும் தங்கள் பாலுறுப்புகளை சுத்தமான துணிகள் அல்லது கைதுடைப்புக் காகிதங்கள் கொண்டு
சுத்தம் செய்துகொள்ளவேண்டும். புணர்ச்சிக்கு முன்னர் தங்களுக்கு அடியில் ஒரு விரிப்பையோ துணியையோ விரித்துக்கொள்வது சிறந்தது.
அதையே பின்னர் சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது, தனியாக வேறு துணியையும் பயன்படுத்தலாம்.
இமாம் இப்னு குதாமா தம்முடைய அல்-முக்னியில் கூறுகிறார்:
புணர்ச்சிக்குப்பின் கணவன் தன்னை துடைத்துக்கொள்வதற்குப் பயன்படுத்தும் வகையில், மனைவியிடம் ஒரு துணி இருப்பது விரும்பத்தக்கது. இதுபற்றி ஆயிஷா (ரழி) கூறினார்கள்: 'ஒரு கூர்மதியான பெண் தன் வசம் ஒரு துணியை வைத்துக்கொண்டு, கணவன் தன்னுடன் புணர்ந்தபின் அதை அவரிடம் கொடுப்பாள். இதன்மூலம் அவர்
தன்னைத் துடைத்துக் கொள்ளவும், அவள் தன்னைக் துடைத்துக் கொள்ளவும் இயலும்.” (அல்-முக்னி 8:136)
புணர்ச்சிக்குப்பின் சுத்தம்செய்வது மிக மிக அவசியமானது. முஸ்லிம் தம்பதியர் இந்த விஷயத்தில் மிகவும் பொடுபோக்காக உள்ளனர். தங்களின் படுக்கை விரிப்பும் ஆடைகளும் தூய்மை கெட்டிருக்கலாம் எனும் விஷயத்தை அலட்சியப்படுத்துகின்றனர்.
மதன நீர் - விந்து வெளியேறுவதற்குமுன் வரும் திரவம் (மதி) தூய்மையற்றது என அனைத்து செவ்விய அறிஞர்களும் கருதுகின்றனர் என்பதை தம்பதியர் நினைவில் வைப்பது அவசியம். மதி என்பது,
பாலியல் கிளர்ச்சி ஏற்பட்டு விந்து இன்னும் வெளியேறாதபோது ஆண் அல்லது பெண்ணில் இருந்து வேகமின்றி வெளிவரும் ஒரு மெல்லிய நிறமற்ற திரவம். அது பெரும்பாலும் ஒருவர் அறியாமலே வெளியேறி விடும். மற்றும், ஆணைவிட பெண்ணுக்கு அதிகமாக ஏற்படும். மதி
வெளியானால் ஒளு மட்டுமே அவசியம். எனினும், சட்டரீதியில் அது தூய்மையற்றதாக (நஜீஸ்) கருதப்படுவதன் காரணமாக, அது உடலின் பிற பாகங்களிலோ ஆடையிலோ பட்டுவிட்டால் அதைக் கழுவிவிடுவது கட்டாயம். மதி தூய்மையற்றது என்பதில் முஸ்லிம் உம்மா முழுவதும் கருத்தொற்றுமை கொண்டுள்ளது என இமாம் நவவி
கூறுகிறார். (காண்க: ஹாஷியா அல்-தஹ்தாவி அலா மராகி அல்-பலாஹ் ப 100, அல்-மஜ்மூஃ ஷரஹ் அல்-முஹத்தப் 2:395 அல்-முக்னி 1:162)

Comments
Post a Comment