உடலுறவு செய்து முடித்த பின்பு மறுமுறை உடலுறவு செய்வதற்கு முன்பு உளு செய்ய வேண்டுமா?
ஒரு தடவை உடலுறவு கொண்ட பிறகு மறுமுறை உடலுறவு கொள்ள ஒருவர் உளுச் செய்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தம் மனைவியுடன் ஒருவர் உறவு கொண்டு விட்டு மீண்டும் உறவு கொள்ள விரும்பினால் அவர் உளுச் செய்து கொள்ளட்டும்"
அறிவிப்பாளர் : அபூஸயித் அல்குத்ரீ(ரலி) நூல் : முஸ்லிம்.
எனவே ஒரு தடவைக்குப் பிறகு மீண்டும் உறவு கொள்ள விரும்புவோர் உளு செய்தல் நபிவழியாகும்.
அடுத்தடுத்த உடலுறவுக்கிடையே குளிப்பது அவசியமா?
அடுத்தடுத்து பலமுறை உடலுறவுகொள்ளும் போது, அவற்றுக் கிடையில் குளிப்பு அவசியமில்லை என்பதில் அறிஞர்களிடையே முழுக் கருத்தொற்றுமை நிலவுகிறது. ஒவ்வொரு முறையும் குளிப்பது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விரும்பிய வழக்கமாக இருந்ததெனினும், அவர்கள் அடுத்தடுத்து உடலுறவுகொண்டுவிட்டு இறுதியில் ஒரே
ஒருமுறை குளித்ததாகவும் அறிவிப்பு உள்ளது.
அனஸ் (ரழி) அறிவிக்கிறார்:
அல்லாஹ்வின் தாதர் (ஸல்) தம்முடைய (பல்வேறு) மனைவிகளுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, ஓரே ஒருமுறை குளிப்பார்கள். (சஹீஹ் மூஸ்லிம் 309, சுனன் அல்-திர்மிதி 140, சுனன் அபூ தாவூத் 820 மற்றும் பிற நூல்கள்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒன்றுக்கும் மேற்பட்ட தம் மனைவியருடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, இறுதியில் ஒருமுறை மட்டும் குளிப்பார்கள் என்பதே இந்த ஹதீஸின் பொருள். ஆக, ஒரு மனைவியுடனோ வெவ்வேறு மனைவியுடனோ அடுத்தடுத்து உடலுறவில்
ஈடுபடுவதற்கு இடையில் குளிப்பது அவசியமில்லை என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.
எனினும், ஒவ்வொரு உடலுறவிற்கும் தனித்தனி குளியல் மேற்கொள்வது மேன்மையாளனதும் விரும்பத்தக்கதுமாகும். அபூ ராஃபி (ரழி) அறிவிக்கிறார்:
'ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடைய (பல்வேறு) மனைவிமார்களுடன் உடலுறவுகொண்டுவிட்டு, இதற்கு ஒரு முறையும் அதற்கு ஒரு முறையும் என (தனித்தனி) குளியல் மேற்கொண்டார்கள்." அவர் கூறுகிறார்:
'நான் கூறினேன், “அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் ஏன் ஒரே ஒருமுறை மட்டும் குளிக்கக்கூடாது?” அதற்கு அவர்கள், “இது கூடுதல் தூய்மையானதும் சிறந்ததும் பரிசுத்தமானதும் ஆகும்.” (சுனன் அபூ தாவூத் 221, சுனன் இப்னு மாஜா 590 மற்றும் முஸ்னத் அஹ்மது, இங்கு அபூ தாவூதின் சொற்களே இடம்பெற்றுள்ளன)
Comments
Post a Comment