பின்புறத்திலிருந்து புணரும் நிலை:
இது மனைவி தன் பின்புறத்தைக் கணவனுக்குக் காட்ட, அவர் அவளைப் புணரும் நிலையாகும். இது, முன்பு மேற்கோள்காட்டப்பட்ட சில ஹதீஸ்களில் (நபிமொழிகளில்) தெளிவாக, வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒர் அறிவிப்பில், மனைவியைச் சித்தரிப்பதற்கு ‘முஜப்பத்’ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அவள் சிரம்பணிந்த நிலையில் கீழ் நோக்கி முகம் வைத்திருக்கிறாள் என்பது இதன் அடிப்படைப் பொருள். மனைவி தன் கைகள் மற்றும் முழங்கால்கள் மீது இருக்க, கணவன் அவளுக்குப் பின்னால் மண்டியிட்டுக் கொள்வதும் சரிதான். இந்த நிலைக்கு அனுமதியுள்ளது என்பதில் ஐயமில்லை.
எனினும், ஏற்கனவே நாம் விவாதித்தபடி, பின்னாலிருந்து புணரும் நிலை என்பது ஆசனவாய் (குதவழி) உடலுறவு அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது புறத்திலிருந்து புணரும் நிலையில், மனைவி தன் பின்புறத்தைக் கணவனுக்குக் காட்ட, அவன் பெண்குறியில் புணர்கின்றான். ஆனால், ஆசனவாய் உடலுறவிலோ, கணவன் அவளுடைய ஆசனவாயில் புணர்கின்றான். பின்னது இஸ்லாத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பக்கவாட்டிலிருந்து புணரும் நிலை:
இந்த நிலையில், தம்பதியர் ஒருவரையொருவர் நோக்கும் விதமாக ஒரு பக்கம் திரும்பிப் படுத்துள்ளனர். அல்லது, அவர்களிருவரும் பக்க வாட்டில் படுத்திருக்க, கணவன் பின்பக்கமாக அவளின் பெண் குறிக்குள் புணா்கின்றான். இந்த நிலை பற்றியும் எந்தவொரு கேள்வியும் இல்லை. இதற்கு அனுமதியுண்டு, இது, கர்ப்பத்தின் முதிர்ந்த காலகட்டங்களில் பெண்ணின் வயிற்றுக்கு இதமளிப்பதால் வசதியான ஒரு நிலையாகும்.
ஈ. நின்றுகொண்டு புணரும் நிலை:
'எனவே, நீங்கள் விரும்பிய புறங்களிலிருந்து உங்கள் விளைநிலங்களை அணுகுங்கள்” என்ற குர்ஆனிய வசனத்தின் விளைவை விரிவுரையாளர்கள் பொதுமைப்படுத்தி, அதில் அமர்வு மற்றும் நிற்கும் நிலைகளையும் உட்படுத்துகின்றனர். எனவே, நிற்கும் நிலையில் குளிப்பதற்கான அனுமதிக்கு கூடுதல் தகுதி உண்டு. ஏனெனில், அது உடலுறவைவிட எளிதான
விஷயமே. (வேறு விதத்தில் கூறுவோமானால், நிற்கும் நிலையில் ஒருவர் தம் துணைவருடன் உடலுறவுகொள்ள அனுமதியுள்ள போது, அந்த நிலையில் (ஒன்றாகக்) குளிப்பதற்கு சந்தேகமின்றி அனுமதியுள்ளது).
தம்பதியர் இருவரும் நின்றாலும் சரி அல்லது ஒருவர் மட்டும் நின்ற நிலையில் இருந்தாலும் சரி, நிற்கும் நிலை உடலுறவு அனுமதிக்கப்பட்டதே. இருவரும் ஒருவரையொருவர் நோக்கும் விதத்தில் இருக்கலாம். அல்லது, மனைவி தன் பின்புறத்தைக் கணவனுக்குக் காட்ட, அவர் பின்பக்கமாக அவளுடைய பெண்குறியில் புணரலாம்.
உ. உட்கார்ந்துகொண்டு புணரும் நிலை:
ஒருவர் தம் துணைவருடன் உட்கார்ந்திருக்கும் நிலையில் உடலுறவு கொள்வதற்கும் நிச்சயமாக அனுமதியுள்ளது. “எனவே, நீங்கள் விரும்பிய புறங்களிலிருந்து உங்கள் விளைநிலங்களை அணுகுங்கள்: எனும் குர்ஆனிய வசனத்தின் ஒளியில் இது அனுமதிக்கப்பட்டது.
ஊ. பெண், மேலேயிருந்து புணரும் நிலை:
இஸ்லாமியரீதியாக, மனைவி கணவனுக்கு மேலே உள்ள உடலுறவு நிலையும் அனுமதிக்கப்பட்டதே. இதற்கு ஆதாரம், இந்த நூலில் பல முறை மேற்கோளிடப்பட்ட அந்த குர்ஆனிய வசனத்தின் பொதுவான நோக்குதான். இதில், கணவன் மல்லாந்து படுத்திருக்க, அவர் மேல் மனைவி அமர்ந்திருப்பதும் அல்லது அவர் மீது தன் உடல் முழுவதையும் கொண்டு படுத்திருப்பதும் அடங்கும்.
சில கணவன்மார் தான் மல்லாந்து படுத்திருக்க மனைவி தன்மேல் ஏறிப் புணர அனுமதிப்பதையும், சில புது மாப்பிள்ளைமார் முதலிரவு அன்றைக்கு உடலுறவில் ஈடுபடாமலிருப்பதையும் தமது ஆண்மைக்கு இழுக்காக நினைக்கின்றனர். இதெல்லாம் தங்கள் மனோ இச்சை அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்டதே தவிர மார்க்கம் இவற்றை கூறவில்லை.
இறுதியாக, தம்பதியர் ஒரு உடலுறவு சந்திப்பின்போதே - பலமுறை கூட - தங்கள் நிலைகளை மாற்றிக்கொள்வதில் தவறேதுமில்லை. மேலும், உடலுறவு நிலைகளில் பலதரப்பட்ட வகைகளும் லாவகமான மாறுதல்களும் மார்க்க ஓழுங்குக்கோ பண்பான நடத்தைக்கோ ஒழுக்க
நாகரிகத்துக்கோ புறம்பானவை அல்ல. இதுபோன்ற செயலை நாணக் குறைவின் அடையாளமாக எண்ணுவது தவறு. அல்லாஹ்வே சட்டப் படி திருமணமான தம்பதிகள் தங்குதடையின்றி பல்வேறு உடலுறவு நிலைகளில் ஈடுபடுவதை அனுமதித்துள்ளான். எனவே, இவ்விஷயத்தில்
தம்பதியருக்குக் குற்றவுணர்வோ சங்கடமோ ஏற்படவேண்டியதில்லை.
Comments
Post a Comment