புணரும் நிலைகள் (உடலுறவு நிலைகள்):
உடலுறவுக்கான பொருத்தமான நிலையைத் (பொஷிஷன்) தெரிந்தெடுக்கும் விஷயத்தில், தம்பதியர் ஒருவருக்கொருவர் உடன்படும் எந்தவொரு நிலையையும் தெரிந்தெடுக்க இஸ்லாம் பொதுவான அனுமதி வழங்குகிறது. எனினும், அது ஆசனவாயில் அல்லாது, பெண்குறியில் இருக்க வேண்டும். ஆசனவாய்ப் புணர்ச்சி திட்டவட்டமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஒரு தம்பதியினருக்கு குறிப்பிட்ட உடலுறவு முறை கூடுதல் வசதியாகவும் சுகமாகவும் இருக்கலாம். இன்னொரு தம்பதியினருக்கு முற்றிலும் வேறுவிதமான நிலை இன்ப உணர்வு அளிக்கலாம். எனவே, அவர்களுக்குரிய மிகப் பொருத்தமான வழியை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உடல் வசதி, திருப்தி, இன்பக்களிப்பு ஆகியவற்றைக் கருதி இதை அமைத்துக் கொள்ளலாம்.
அல்லாஹ் கூறுகிறான்:
உங்கள் மனைவிகள் உங்களுக்கான விளைநிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பிய புறங்களிலிருந்து உங்கள் விளைநிலங்களை அணுகுங்கள். எனினும், முன்னதாக உங்களுக்கென சில நற்செயல்களை செய்துகொள்ளுங்கள்; மற்றும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (குர்ஆன் 2:224)
இந்த வசனத்தில் அல்லாஹ் 'ஹர்ஸ்' எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். அதற்கு
விளைநிலம் எனப் பொருள் பெண்ணிற்கும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். அதற்கு விளைநிலம் எனப் பொருள். பெண்ணிற்கும் விளை
நிலத்திற்கும் இடையில் உள்ள ஒப்புமையிலிருந்து, ஓருவர் தம் மனைவியின் பெண்குறி வாயிலாகவே அவளுடன் உடலுறவு கொள்ளலாம் எனப் புலப்படுகிறது. எனெனில், இதன் மூலமே வித்துக்களை விளைக்க இயலும் மற்றும் அவள் கர்ப்பம் தரிக்க இயலும். எனினும், அந்த இடத்தை
அணுகுவதற்கு எந்த நிலை அல்லது பக்கத்தை வேண்டுமானாலும் - முன்னால், பின்னால், அல்லது அவள் முகம் குப்புற மண்டியிட்ட நிலையில் - அமைத்துக்கொள்ளலாம். (அல்- மின்ஹாஜ் ஷரஹ் சஹீஹ் முஸ்லிம் ப.1084).
மேலும், இந்த வசனத்தை விளக்குகின்ற, அது இறக்கி அருளப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையை (சபப் அல்-நுஸூல்) குறிப்பிடும் பல அறிவிப்புகள் நபிமொழித் தொகுப்புகளில் உள்ளன. அவற்றில் சில இங்கு தரப்பட்டுள்ளன:
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரஹி) அறிவிக்கிறார்:
'ஒருவர் தம் மனைவியைப் பின்னாலிருந்து (ஆனால்) அவளின் பெண்குறியை அணுகுவாரெனில், (அவள் கர்ப்பம் தரிக்கும்) குழந்தை மாறுகண் உடையதாகப் பிறக்கும்' என யூதர்கள் கூறிவந்தனர். எனவே, இந்த வசனம் இறங்கியது:
ஒருவர் தம் மனைவியைப் பின்னாலிருந்து (ஆனால்) அவளின் பெண்குறியை அணுகுவாரெனில், (அவள் கர்ப்பம் தரிக்கும்) குழந்தை மாறுகண் உடையதாகப் பிறக்கும்' என யூதர்கள் கூறிவந்தனர். எனவே, இந்த வசனம் இறங்கியது:
"உங்கள் மனைவிகள் உங்களுக்கான விளைநிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பிய புறங்களிலிருந்து உங்கள் விளைநிலங்களை அணுகுங்கள். '(சஹீஹ் அல்-புகாரி 4254, சஹீஹ் முஸ்லிம் 1435 சுனன் அல்-திர்மிதி 2978, இங்கு முஸ்லிமின் சொற்களே இடம்பெற்றுள்ளன)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்:
உமர் (ரழி) அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்துவிட்டேன்' என்றார். 'என்ன விஷயம் உம்மை அழித்துவிட்டது?" என நபியவர்கள் (ஸல்) வினவினார்கள். நேற்றிரவு நான் என்னுடைய சேணத்தை மாற்றிவிட்டேன் (தன் மனைவியுடன் பின்புறமிருந்து, ஆனால் பெண்குறியில் புணர்ச்சிகொள்வதைக் குறிக்கும் சொற்வழக்கு)." இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எதுவும் கூறவில்லை. பின்னார் இந்த வசனம் அல்லாஹ்வின் தூதருக்கு இறங்கியது: 'உங்கள் பெண்கள் உங்களுக்கான விளைநிலங்கள்.
எனவே, நீங்கள் விரும்பிய புறங்களிலிருந்து உங்கள் விளைநிலங்களை அணுகுங்கள்." எனவே, நபியவர்கள் ) கூறினார்கள்: அவளை முன்னாலோ பின்னாலோ அணுகிக்கொள்ளுங்கள். ஆனால், ஆசனவாயையும் மாதவிடாயையும் (காலத்தை) தவிர்த்துவிடுங்கள்." (சுனன் அல்-திர்மிதி 2980 மற்றும் நஸயீ தன் இஷ்ரத் அல் நிஸாவில் 94)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்:
(இஸ்லாம் வருகைக்குமுன்) சிலைவணங்கிளாய் இருந்த இந்த அன்சாரி கோத்திரம், வேதக்கார மக்களான யூதர்களோடு கூடி வசித்தனர். அவர்கள் (அன்சாரிகள்) கல்வியறிவு விஷயத்தில், தங்களைவிட அவர்கள் (யூதர்கள்) மேன்மையானவர்கள் என்பதை ஏற்றிருந்தனர். என்வே, அவர்களின் அநேகச் செயல்களைப் பின்பற்றிவந்தனர். வேதக்கார மக்கள் (இங்கு யூதர்கள்) தங்கள் பெண்களை ஓரேயோரு பக்கத்தில் மட்டும் அணுகுவார்கள் (அதாவது, அவள் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில்). ஏனெனில், இதுவே பெண்ணுக்கு மிக மறைவான நிலையாக இருந்தது. ஆக, அந்த அன்சாரிக் கோத்திரமும் அவர்களிடமிருந்து (யூதர்கள்) இதையே பின்பற்றினர். (எனினும்), குறைஷி குலத்தா தங்கள் பெண்களின் மறைப்பை முழுவதுமாக அவர்களிடமிருந்து (யூதர்கள்) இதையே பின்பற்றினர். (எனினும்), குறைஷி குலத்தாரோ, தங்கள் பெண்களின் மறைப்பை முழுவதுமாக அகற்றிவிட்டு,
அவர்களுடன் முன்னாலும் பின்னாலும் அவர்கள் மல்லாந்து படுத்திருக்கும் நிலையிலும் சுகம் தேடுவார்கள். முஹாஜிரீன்
(புலம்பெயர்ந்தவர்கள்) மதீனா வந்தபோது, அவர்களுள் ஒருவர் ஓர் அன்சாரிப் பெண்ணைத் திருமணம் செய்தார். அவளுடன் அதே விதமான காரியங்களை (அதாவது, குறைஷிகளின் வழக்கத்திற்கு ஏற்ப) செய்ய விரும்பினார். ஆனால், அவள் அதற்கு இணங்க மறுத்து இவ்வாறு கூறிவிட்டாள்: "எங்களை ஒரு பக்கத்திலிருந்து
மட்டும்தான் அணுகுவார்கள் (அதாவது, நாங்கள் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில்). எனவே, அதே விதமாகச் செய்யுங்கள். இல்லாவிட்டால், என்னிடமிருந்து விலகிக்கொள்ளுங்கள்." அவர்களின் இந்த விவகாரம் பற்றி செய்தி பரவி, அல்லாஹ்வின் தூதரை எட்டியது. எனவே, அல்லாஹ் இவ்வாறு இறக்கிவைத்தான்: "உங்கள் மனைவிகள் உங்களுக்கான விளைநிலங்களாவர். எனவே. நீங்கள் விரும்பிய புறங்களிலிருந்து உங்கள் விளைநிலங்களை அணுகுங்கள்." அதாவது முன்னால், பின்னால் அல்லது அவள் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில். எனினும், இந்த வசனம் குழந்தை பிறக்கும் உறுப்பை (பெண்குறியை)
மட்டுமே குறிப்பிட்டது. (சுனன் அபூ தாவூத்
இவ்வாறு நாம் செய்யும் போது கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளலாம் ஏனெனில் கிறிஸ்தவ மிஷனரிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உடலுறவு நிலை பெண் தன் கால்கள் இரண்டையும் விரித்து மல்லாந்து படுத்திருக்க கணவன் அவள் மீது தட்டையாகச் சாய்ந்து புணர்வது மாத்திரமே. இதன் காரணாகவே அது மிஷனரி பொஷிஷன் என்று உலகளாவிய ரீதியில் அழைக்கப்படுகிறது. இன்றும் கூட அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு உடலுறவு பொஷிஷனும் மிஷனரியே ஆகும். எனினும் ஓர் முஸ்லிம் இவ்வாறாக மிஷனரி பொஷிஷனில் தன் மனைவியுடன் புணர தடையேதுமில்லை மாறாக அல்குர்ஆன் ஸுன்னா அதையும் அங்கீகரிக்கவே செய்கிறது. அவற்றை அடுத்து நோக்குவோம்.
குறிப்பிட்ட சில நிலைகளைப் பொறுத்தவரை, உடலுறவு ஒழுங்குகள் பற்றி எழுதப்பட்டுள்ள நூல்கள் பின்வரும் தகவல்களைக் கூறுகின்றன:
Comments
Post a Comment