அலங்கரித்தலும்‌ அழகுபடுத்தலும்‌:

 


அலங்கரித்தலும்‌ அழகுபடுத்தலும்‌:



உடலுறவுக்குத்‌ தயாராவதன்‌ மிக முக்கிய பகுதி, மனைவி தன்னைக்‌ கணவனுக்காக அழகுபடுத்திக்கொள்வதில்‌ கவனமாய்‌ இருப்பதே.


மனிதர்கள்‌, அழகானவற்றைப்‌ பார்த்து, ரசித்து, மகிழக்கூடிய காட்சி சார்ந்த படைப்பினங்களைப்‌ பார்ப்பதிலும்‌ அனுபவிப்பதிலும்‌ மகிழ்ச்சி


அடைவார்கள்‌. இதனால்தான்‌ இஸ்லாம்‌, ஜும்‌ஆ (வெள்ளிக்கிழமை தொழுகை), ஈத்‌ (பெருநாள்‌) போன்ற மக்கள்‌ கூடும்‌ இடங்களுக்குச்‌ செல்லும்போது தங்களை அலங்கரித்துச்‌ செல்ல வேண்டும்‌ என ஊக்குவிக்கிறது. முஸ்லிம்கள்‌ இதர முஸ்லிம்களின்‌ கண்களுக்கு இதமாகக்‌ காட்சிதர வேண்டும்‌. வாழ்க்கைத்‌ துணைவரின்‌ விஷயத்தில்‌


இது மேலும்‌ முக்கியத்துவம்‌ பெறுகிறது.



எனவே, பெண்‌ தன்‌ கணவனுடன்‌ உடலுறவுக்காகத்‌ தன்னை அலங்கரித்துக்‌ தயார்படுத்திக்கொள்வதன்‌ முக்கியத்துவத்தை மேலும்‌ வலியுறுக்கக்‌ தேவையில்லை. ஹூர்‌ அல்‌-அய்ன்‌ அல்லது அழகான


கண்களையுடைய கன்னிகள்‌: எனும்‌ சுவனத்து மங்கைகளை சித்திரிக்கையில்‌ அல்லாஹ்‌ இவ்வாறு கூறுகிறான்‌:



அவர்கள்‌ இரத்தினங்களையும்‌ பவளங்களையும்‌ போல அழகானவர்கள்‌. (குர்‌ஆன்‌ 55:59)



ஆகவே, அலங்காரம்செய்தல்‌ என்பது ஒருவர்‌ தன்‌ துணைவரின்‌ கவனத்தை ஈர்ப்பதற்கான வழியாகும்‌. திடமான உடலுறவையும்‌ அதன்மூலம்‌ திடமான மணவாழ்வையும்‌ நாடும்‌ பெண்மணி, தன்னைத்‌


தன்‌ கணவனுக்காக அழகுபடுத்த முனைவது அவசியம்‌. இதன்மூலம்‌, கணவனும்‌ பிற பெண்களை இச்சையுடன்‌ பார்ப்பதிலிருந்து காக்கப்‌படுவார்‌.



துரதிர்ஷ்டவசமாக, பேணுதலான முஸ்லிம்‌ பெண்‌ தன்னைத்‌ தன்‌ கணவனுக்காக வசீகரிக்கும்‌ விதத்தில்‌ அலங்கரித்துக்கொள்வது சரியான செயலல்ல என சில முஸ்லிம்கள்‌ கருதுகின்றனர்‌. இது உண்மைக்கு


எதிரான கருத்து. ஒரு பெண்‌ தன்‌ கணவனுக்காகப்‌ பல்வேறு அழகுபடுத்தல்‌ வழிகளைப்‌ பயன்படுத்துவதற்கு அனுமதி மட்டுமல்ல நற்கூலியும்‌ உண்டு. இறைபக்தியும்‌ பேணுதலுமுள்ள முஸ்லிமாக இருப்பதன்‌ ஒரு பகுதி, கற்பு காத்து வாழுதல்‌. இதற்கான அனைத்து வழிகளும்‌


ஊக்குவிக்கப்படுகின்றன - அவை ஷரீஆவினால்‌ (இஸ்லாமியச்‌ சட்டத்தினால்‌) குறிப்பாக விலக்கப்படாத வழிகளாக இருந்தாலே


போதும்‌.



பெண்கள்‌ தங்களை அலங்கரித்துக்கொண்டு, தங்கள்‌ கணவர்கள்‌ முன்‌ அழகாகக்‌ தோன்றவேண்டுமென அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) ஊக்குவிக்கார்கள்‌. அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்‌:



அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ தரவேண்டிய கடிதம்‌ தன்னிடம்‌ உள்ளதாக ஒரு பெண்‌ திரைமறைவிற்குப்‌ பின்னாலிருந்து சைகை காட்டினாள்‌. அல்லாஹ்வின்‌


தூதர்‌ (ஸல்‌) தம்‌ கையை விலக்கிக்கொண்டு "கூறினார்கள்‌: “இந்தக்‌ கை ஆணுடையுதா பெண்ணுடையுதா என்பதை என்னால்‌ அறிய முடியவில்லையே. அகுற்கு அவள்‌, “இல்லை, இது ஒரு பெண்ணின்‌ கைதான்‌' என்றாள்‌. அப்போது நபியவர்கள்‌, 'நீ பெண்ணாக இருப்பின்‌, உன்னுடைய நகங்களை அழகுபடுத்த மருதாணி பூசியிருப்பீர்‌ என்றார்கள்‌. ' (ஸுனன்‌ அபூ தாவூத்‌ 4163)


ஹிந்து பின்த்‌ உத்பா அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ வந்து இப்படிக்‌ கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்‌, அல்லாஹ்வின்‌ தூதரே! என்னுடைய உறுதிப்‌ பிரமாணத்தை (பைஅத்‌) ஏற்றுக்‌ கொள்ளுங்கள்‌. அதற்கு நபியவர்கள்‌ (ஸல்‌) பதிலளித்தார்கள்‌:



நீ உன்னுடைய உள்ளங்கைகளின்‌ தோற்றத்தை மாற்றும்வரை நான்‌ உன்னுடைய உறுதிப்‌ பிரமாணத்தை ஏற்கமாட்டேன்‌. அவை வனவிலங்கின்‌


பாத நகங்கள்‌ போன்று தோன்றுகின்றன! (சுனன்‌ அபூ தாவூத்‌ 4102)



அன்னை ஆயிஷா (ரழி) மேலும்‌ அறிவிக்றார்‌:


நஜாஷி (மன்னர்‌) தமக்கு அன்பளிப்பாக அளித்த சில நகைகளை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) பெற்றார்கள்‌. அவற்றில்‌, அபிஸீனியக்‌ கல்‌ பதித்ததொரு தங்க மோதிரமும்‌ இருந்தது.' ஆயிஷா (ரழி) கூறினார்‌: 'அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தம்‌ முகத்தை அதிலிருந்து திருப்பி, அதை ஒரு குச்சியாலோ தம்‌ விரலாலோ எடுத்து, அபுல்‌ ஆஸின்‌ மகளும்‌ தம்‌ மகள்‌ ஸைனபின்‌ மகளுமான உமாமாவை அழைத்து, என்‌ அருமை மகளே, இதை அணிந்து உன்னை அலங்கரித்துக்கொள் என்றார்கள்‌.” (சுனன்‌ அபூ தாவூத்‌ 4838)



எனவே, மனைவி தன்னை அழகுபடுத்திக்கொள்வது திடமான உடலுறவுக்கு வழிவகுக்கும்‌; மேலும்‌ உடலுறவுக்கு உடல்ரீதியாகத்‌ தயாராதலில்‌ இது மிகத்தேவையான அம்சமாகும்‌. இதுகுறித்து சில


முக்கியமான விஷயங்களைக்‌ அடுத்த  ்தலைப்பில்  தருகிறோம்‌:



Comments