தம்பதியினர்‌ தம்‌ உடலுறவுச்‌ செயல்பாட்டைப்‌ படமெடுத்தல்‌:

 


தம்பதியினர்‌ தம்‌ உடலுறவுச்‌ செயல்பாட்டைப்‌ படமெடுத்தல்‌:



தம்பதியர்‌ ஒருவரையொருவர்‌ உடலுறவுக்‌ கோலத்தில்‌ படம்‌ பிடித்து அல்லது உடலுறவுகொள்வதைத்‌ தாங்களே ஒளிப்பதிவு செய்து, பின்னர்‌ அந்தப்‌ புகைப்படத்தையோ ஒளிக்காட்சியையோ பார்த்து


ரசிப்பது கூடுமா என்று கேட்கப்பட்டது.



புகைப்படம்‌ குறித்ர சட்டத்தீர்ப்பு விஷயத்தில்‌ சமகால இஸ்லாமிய அறிஞர்களிடையே நிலவும்‌ கருத்து வேறுபாடு எதுவாயினும்‌ புகைப்‌படம்‌ எடுப்பது, உயிருள்ள ஜீவராசிகள்‌ மற்றும்‌ மனிதர்களைச்‌ சித்திரம்‌ இட்டுதல்‌ (தஸ்வீர்‌) என்னும்‌ தலைப்புக்குக்கீழ்‌ வரும்‌ என்பது அறிஞர்கள்‌ பலரின்‌ நிலைப்பாடு. இது இருபதுக்கும்‌ மேற்பட்ட மிக மிக நம்பகமான ஹதீஸ்களில்‌ தெளிவாகத்‌ தடைசெய்யப்பட்டுள்ளது. புகைப்படம்‌ பற்றிய இஸ்லாமிய அறிஞர்களின்‌ கருத்துவேறுபாடு ஒருபுறமிருக்க, ஒருவர்‌ தம்‌ துணையாளை நிர்வாணக்‌ கோலத்தில்‌ படம்பிடித்து


அல்லது தங்கள்‌ உடலுறவை ஒளிப்பதிவுசெய்து, அதைக்‌ கண்டு ரசிப்பதை எவ்விதத்திலும்‌ அனுமதிக்கப்பட்ட ஒன்றாகக்‌ கருதமுடியாது.



இதற்கான காரணம்‌ தெளிவாக உள்ளது. இதுபோன்ற ஆபாசப்‌ படங்களைப்‌ பிடிப்பது மூலம்‌, ஒரு தம்பதியர்‌ தங்கள்‌ நிர்வாணக்‌ கோலத்தைப்‌ பிறர்‌ காண்பதற்கான வாய்ப்பு அளிக்கும்‌ சாத்தியம்‌ உள்ளது. ஆகவே, இதற்கு அனுமதியில்லை. பாலியல்‌ படங்களை


இடம்மாற்றி வைப்பதற்கோ தொலைத்துவிடுவது மூலம்‌ அந்நியரின்‌ கைகளுக்குச்‌ சென்றுவிடுவதற்கோ சாத்தியம்‌ உண்டு. இந்தப்‌ படங்‌களோ ஒளிப்பதிவுகளோ தம்பதியருடைய குழந்தைகளின்‌ கைகளுக்கு எப்படியோ சென்றுவிட்டால்‌ என்ன நடக்கும்‌ என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌!



இந்தப்‌ படங்களைப்‌ பாதுகாத்து, ஒளித்து மறைத்து வைத்தாலும்‌ கூட, அனைத்து முன்னெச்சரிக்கைகளையும்‌ மீறி எவராவது பார்த்து


விடக்கூடும்‌ சாத்தியம்‌ இருக்கவே செய்கிறது. வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வு மூலம்‌ மூன்றாவது ஆளின்‌ கைகளுக்கு இந்தப்‌ படங்கள்‌ செல்லக்கூடும்‌. ஒரு தீங்கு அசலில்‌ நிகழுமுன்‌ அதைத்‌ தடுப்பது,


இஸ்லாமியச்‌ சட்டவியலின்‌ நன்கு நிறுவப்பட்டதொரு கோட்பாடாகும்‌.



மேலும்‌ இந்தச்‌ செயல்கள்‌, இஸ்லாம்‌ கட்டளையிடும்‌ நாணத்திற்கு முரணாக உள்ளன. தம்பதியர்‌ ஒருவரையொருவர்‌ நிர்வாணக்‌ கோலத்தில்‌ பார்க்கலாம்‌ என்பது உடலுறவின்போது அதற்கான


தேவை இருப்பதாலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்பொழுதும்‌ கூட, அதைத்‌ தவிர்ப்பது மேன்மையானது.



முடிவாக, தம்பதியர்‌ தங்களின்‌ நிர்வாணப்‌ படங்களை எடுத்து வைத்துக்‌ கொண்டு, பின்னர்‌ அவற்றைக்‌ கண்டு ரசிப்பதற்கு இஸ்லாமியச்‌ சட்டத்தில்‌


அனுமதி இல்லை. அத்துடன்‌, புகைப்படத்திற்கு அனுமதியில்லை என்று கூறும்‌ அறிஞர்களின்‌ கருத்தை அலட்சியப்படுத்துவதாகவும்‌ உள்ளது.



Comments