நன்னடத்தையும் வசீகரமும்:
கணவனின் உளவியல் தயார்நிலையின் முக்கியமானதொரு கூறு, உடலுறவுக்குமுன் மனைவியை நல்ல விதமாக நடத்துதல், அன்பாகப் பேசுதல், விளையாடுதல், பாசம் காட்டுதல் போன்றவை. கணவன் தன் மனைவியை - உடலுறவு நாடும் வேளையில் மட்டுமல்லாது - எல்லா நேரங்களிலும் கண்ணியமாக நடத்தவேண்டும் எனப் பொதுவாக இஸ்லாம் கட்டளையிடுகிறது. அல்லாஹ் கூறுகிறான்:
அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக்கூடும். (குர்ஆன் 4:19)
ஒருவர் தம் மனைவியை சொல்லிலும் செயலிலும் பரிவோடு நடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வலியுறுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூ
ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்:
மிகச் சிறந்த நற்குணம் கொண்டவர்களே மிகச் சிறந்த இறைநம்பிக்கையாளர்கள் ஆவர். மேலும், உங்கள் பெண்களிடம் மிகச்சிறந்த முறையில்
நடந்துகொள்டவர்களே உங்களில் மிகச் சிறந்தவர்கள். (சுனன் அல். திர்மிதீ 1162. இது மிகவும் நம்பகமான அறிவிப்புத் தொடரைக் கொண்டுள்ளது)
'ஒரு கணவர் தன் மனைவியை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடைமுறை எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள். அவர்கள் தம் மனைவியர் மீது மிகுந்த பண்பும் பரிவும்
கொண்டு, அவர்களை நட்புடன் நடத்தினார்கள். அவர்களிடம் பாசமாகவும் நகைச்சுவையாகவும் தாராளமாகவும் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் மனைவியருடன் சிறந்த முறையில் நடந்துகொண்டதற்கான பல எடுத்துக்காட்டுகள் நபிமொழித் தொகுப்புகளில் காணப்படுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்:
உங்களில் மிகச் சிறந்தவர், உங்கள் குடும்பத்தாரிடம் மிகச் சிறந்த முறையில் நடப்பவரே. நான் என் குடும்பத்தாரிடம் மிகச் சிறந்த முறையில் நடந்து கொள்கிறேன். (சுனன் இப்னு மாஜா 1977)
எனவே, மனைவியை அன்போடு நடத்துவது இஸ்லாத்தின் பொது விதி. ஒருவர் உடலுறவுகொள்ள நாடும்பொழுது இது மிகவும் தேவையாகிறது. படுக்கை அறைக்கு வெளியில் தம்பதியர் நடந்துகொள்ளும்
விதம், படுக்கை அறைச் செயல்பாடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உறவுக்குத் தேவையான சூழலை உருவாக்குவதற்கு, கணவன்பண்பாகவும் பாசமாகவும் இருந்து, அவள் மயங்கும் வகையில் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும். பெண்கள் தங்களிடம் கூறப்படும்
சொற்களாலும் அதில் பொதிந்துள்ள பொருளாலும் 'உறவுக்குத் தூண்டப்படுன்றனர்' என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. அதாவது, அவருடைய சொற்கள் அவளுக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்துகின்றன என்பதே முக்கியம். அது முழுவதும் ஒரு செயல்தொகுப்பு. அதில் ஓவ்வொரு சிறிய விஷயமும் முக்கியமானது; திடமான உடலுறவு அனுபவத்துக்கு வழிவகுக்கக் கூடியது. இதுபற்றி குர்ஆனில் மறைமுகமான சுட்டுதல் உள்ளது. அல்லாஹ் கூறுகிறான்:
உங்கள் மனைவிகள் உங்களுக்கு விளைநிலங்களாவர். எனவே, நீங்கள்
விரும்பிய புறங்களிலிருந்து உங்கள் விளைநிலங்களை அணுகுங்கள். எனினும்,
முன்னதாக உங்களுக்கென சில நற்செயல்கள் செய்துகொள்ளுங்கள்; மேலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (குர்ஆன் 2:224)
குர்ஆன் விரிவுரையாளர்களில் சிலர், “எனினும், முன்னதாக உங்களுக்கென சில நற்செயல்கள் செய்துகொள்ளுங்கள்' எனும் சொற்றொடர், உடலுறவுக்கு முன் நிகழும் விஷயங்களின் முக்கியத்துவம் பற்றியே சுட்டுவுதாகக் கூறுகின்றனர். இதில் சரியான எண்ணம் கொள்ளுதல், பொருத்தமாக துஆ ஓதுதல், ஆசையை அதிகரிக்க முன்விளையாட்டில் ஈடுபடுதல், காரியத்தை எளிதாக்குதல் போன்றவை அடங்கும். (தஃப்சீர் அபூஅல்-சவூத் 1:223 மற்றும் த.ஃப்சீர் அல்- கஷ்ஷாஃப் 1:294)
ஒருவர் தம் மனைவியைக் கொடுமையாக நடத்துவது, பிறகு அவளுடன் உடலுறவிலும் ஈடுபடுவது எந்த அளவிற்கு ஈனத்தனமான செயல் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு ஹதீஸில் சித்தரிக்கின்றார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவியை அடிமையை அடிப்பதுபோல் அடித்து விட்டு, பின்னர் மாலையில் அவளுடன் உடலுறவிலும் ஈடுபடுவதா! (சஹிஹ்
அல்-புஹாரி 4658 மற்றும் சஹீஹ் முஸ்லிம் 855, இங்கு புஹாரியின் சொற்களே இடம்பெற்றுள்ளன)
இங்கே அல்லாஹ்வின் தாதர் (ஸல்) திகைப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஒருவர் தம் மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, பின்னர் அவளுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கும் துணிச்சல் வந்து விட்டதோ என வியக்கிறார்கள். இதனால்தான் நபியவர்கள் (ஸல்) இன்னொரு ஹதீஸில் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தம் மனைவியை பொலிக்குதிரையை அடிப்பதுபோல்
அடித்துவிட்டு, பின்னர் எப்படி அவளுடன் படுத்துறவாட இயலும்?”
(சஹிஹ் அல்-புஹாரி 5695)
Comments
Post a Comment