எதிர்பாலினரின் உடையணிதலும் 'டிரான்ஸ்வெஸ்டிஸமும்”:
எதிர்பாலினரின் உடையணிதல் என்பது, மாற்று பாலர் தொடர்பான ஆடையை அல்லது உள்ளாடையை அணிதலாகும். அல்லது, சில வேளைகளில், அலங்காரம் செய்வதையும் அது குறிக்கும். இந்த மாற்று உடையணிதல் பாலியல் காரணங்களுக்காக இருப்பின் அது “டிரான்ஸ்வெஸ்டிஸம்” எனப்படுகிறது. ஒரு டிரான்ஸ்வெஸ்டியர், மற்ற பாலரின் ஆடைகளை அணிந்துகொள்வதில் அல்லது பெருமையாக நடைபோடுவதில் பாலியல் இன்பம் பெறுகிறான்/ள்.
பெரும்பாலான சந்தாப்பங்களில் 'டிரான்ஸ்வெஸ்டிஸத்தின்’ உள்நோக்கம் என்னவெனில், மாற்று பாலரின் ஆடை, அணிகலன்கள் மீது ஒருவகையான மூடக் களியாட்டக் கவர்ச்சி கொள்வதாகும். சிலவேளைகளில், அது மாற்று பாலரின் செயல் பாத்திரம் மீதுள்ள கவர்ச்சியாகவும் இருக்கலாம். இதற்கு ஆடை ஓர் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. ஆக, தன் மனைவியின் உடைகளையோ கீழ் உள்ளாடைகளையோ அணியும்
கணவனும், தன் கணவனின் உடைகளையோ கீழ் உள்ளாடைகளையோ அணியும் மனைவியும் 'டிரான்ஸ்வெஸ்டியர்' எனப்படுகின்றனர். இஸ்லாத்தில் மாற்று உடையணிதலுக்கோ டிரான்ஸ்வெஸ்டிஸத்திற்கோ இடமில்லை. மாற்றுப் பாலரின் பாத்திரத்தை வகிப்பது, அவர்களைப்போல் நடந்துகொள்வது, ஆடைகளை அணிவது ஆகியவை
கடுமையாக வெறுக்கப்பட்டுள்ளன; சபிக்கப்பட்டுள்ளன.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்:
பெண்களைப் போல் நடந்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போல் நடந்துகொள்ளும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள்.
(சஹீஹ் அல்-புஹாரி 5546)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்:
பெண்மையுடைய ஆண்களையும், ஆண்மையுடைய பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்து, 'அவர்களை உங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றிவிடுங்கள்” எனக் கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ் கூறினார், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இன்ன, இன்ன ஆளை வெளியேற்றினார்கள்' மற்றும் உமர் இன்ன, இன்ன ஆள்களை வெளியேற்றினார்கள்.
(சஹிஹ் அல்-புஹாரி 5547)
அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்:
பெண்ணின் உடையை அணியும் ஆணையும், ஆணின் உடையை அணியும் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள்.
(சுனன் அபூ தாவத் 4095)
இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி, சஹீஹ் அல்-புஹாரிக்கான தம் விரிவுரையில் இதுபற்றி விளக்குகிறார். ஆண்கள், பெண்களைப் போல் நடந்துகொள்வதும், அலங்காரம் செய்வதும், பேசுவதும் விலக்கப்பட்டுள்ளன. மறுபுறம் பெண்ணுக்கும் இது பொருந்தும்.
ஆடைகளைப் பொறுத்தவரை, இது ஒருவரின் நகர வழக்காற்றைச் சார்ந்துள்ளது என்கிறார். சில பண்பாடுகளில் ஆண், பெண் ஆடைகள்
வேறுபாடின்றி இருக்கலாம்; வெறுமனே ஹிஜாப் மற்றும் மேலங்கியை வைத்தே பெண்கள் அடையாளப்படுத்தப்படலாம் (இதுபோன்ற
இடங்களில் ஒருபாலர் உடையை அணிவதற்கு அனுமதியுண்டு). பேச்சு மற்றும் உடல் அசைவுகளின் பாவனை விஷயத்தில், வேண்டுமென்றே செய்பவர்மீது மட்டுமே குற்றம்சாரும். ஒருவர் அந்த இயல்பிலேயே
படைக்கப்பட்டிருந்தால், அவரைக் குற்றம்சாட்ட இயலாது. எனினும், அவர் தம் நடத்தையைப் படிப்படியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அவர் முயற்சிசெய்து தம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால் - குறிப்பாக,
அதுபோன்ற நடத்தையிலேயே மனநிறைவு கொண்டிருந்தால் - அவர் மீது குற்றம் உண்டு. ஆயினும், முயற்சிகளுக்குப் பின்பும், அவரால்
தம்மை மாற்றிக்கொள்ள இயலாவிட்டால், அவர்மீது குற்றமில்லை,
(பத்ஹ் அல்-பாரி ஷரஹ் சஹீஹ் அல்-புஹாரி 10:409)
மேற்கூறியவற்றிலிருந்து, மாற்றுப் பாலரைப் போன்று உடையணிவதோ குணநலனைப் பாவிப்பதோ பாவச்செயல் என்பது தெளிவாகிறது. இந்த நடத்தையின் தீங்கு தனிமனிதரையும் மொத்த சமூகத்தையும் சேர்த்து பாதிக்கிறது. இது இயற்கை ஒழுங்குக்கு எதிரான கலகமாகும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக அவர்களுக்கேயுரிய பண்புகள் உள்ளன. எனவே, ஆண்கள் பெண்மை உடையவர்களாகவோ பெண்கள் ஆண்மை உடையவர்களாகவோ ஆகிவிட்டால், இயற்கை ஒழுங்கு தலைகீழாய் மாறி சிதறிவிடும்.
ஆகவே, உடலுறுவின்போதும் முன்விளையாட்டின்போதும் கணவன்
தன் மனைவியின் ஆடையையோ உள்ளாடையையோ அணிந்து, மனைவியின் பாத்திரத்தை வடிப்பது பாவமாகும். மறுபுறம் மனைவிக்கும் இது பொருந்தும். ஆண் ஆணாகத்தான் இருக்கவேண்டும்; ஆணின் பாத்திரத்தையே வகிக்கவேண்டும். பெண் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்; பெண்ணின் பாத்திரத்தையே வகிக்கவேண்டும். பாலியல் முன்விளையாட்டின்போது பாத்திரங்களைத் தலைகீழாக மாற்றிக் கொள்வது பாவமும் தரக்குறைவான செயலும் மட்டுமின்றி, அது
படுக்கை அறைக்கு வெளியே தம்பதியரின் உறவில் நேரடி செல்வாக்குச் செலுத்தும்.
Comments
Post a Comment