புணர்ச்சி:
தம்பதியர் முன்விளையாட்டில் போதிய நேரம் கழித்தபின் தாங்கள் தயாராகிவிட்டதாக உணர்ந்தால், அடுத்து அவர்கள் புணர்ச்சியில் ஈடுபடலாம். இது தொடர்பாக, பல விதிமுறைகளும் ஒழுங்குகளும் உள்ளன.
தனித்திருத்தல் (ப்ரைவஸி):
உடலுறவு கொள்வதை மற்றவர்கள் பார்க்கலாமா?
தம்பதியர் உடலுறவில் ஈடுபடும்பொழுது தனித்திருத்தல் மிக, மிகமுக்கியமான விஷயமாகும். இது, புணர்ச்சியின்போது மட்டுமின்றி
முன்விளையாட்டின்போதும்கூட அவசியம். தாங்கள் குழந்தைகள் உட்பட பிறரின் பார்வைகளிலிருந்து விலகியிருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள நாடும் பொழுது, பால்குடிக்கும் சிறிய குழந்தையைக்கூட அறையைவிட்டு வெளியேற்றிவிடுவார் என இப்னு அல்ஹாஜ் அல்-மாலிகி தம்முடைய அல்-மத்ஃகலில் குறிப்பிடுகிறார்.
அறிஞர்கள் சிலரின் கூற்றில், உடலுறவின்போது அந்த அறையில் ஒரு பூனை இருப்பதுகூட விரும்பத்தகாததாகும். (உகுல் அல்-நஆஷரா
அல்-ஸவ்ஜிய்யா ப.67)
இந்த விஷயத்தில், தவறுதலாகக்கூட எவரும் தம்பதியர் கூடும் அறைக்குள் நுழையாமல் இருப்பதற்குக் கதவுகளை அடைத்துத்
தாழிட்டுக் கொள்ளவேண்டும். தப்பித் தவறிக்கூட அக்கம்பக்கத்தார் உள்ளே பார்த்துவிடுவதைத் தவிர்க்க ஜன்னல்களை அடைத்துத் திரைகளால் சரிவர மறைத்தல்வேண்டும். வீடு, அடுக்கு மாடிக் கட்டிட வளாகத்திலோ, மக்கள் நெரிசல் உள்ள பகுதியிலோ அமைந்திருந்தால் இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதற்கு உரிய
முக்கியத்துவம் தராத தம்பதிகள், தாங்கள் உடலுறவில் ஈடுபடுவதைப் பிறர் பார்ப்பதற்கு வாய்ப்பளித்ததாக ஆகிவிடும். இது வெட்கங்
கெட்ட, பாவமான, ஒருபோதும் அனுமதிக்கவியலாத செயலாகும்.
ஒருவரின் நிர்வாணக் கோலத்தை - குறிப்பாக, உடலுறவு வேளையில் - பிறர் முன் மறைப்பது ஷரீஆவின் முக்கியமானதொரு கடமையாகும்.
காட்சியளித்தல், மாற்றுப் பாலரின் உறுப்புகளைக் கண்டு ரசித்தல் ஆகியவற்றுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பது தெளிவான விஷயம்.
சிலர் தங்களின் உடல்களை அல்லது உடலுறவுச் செயல்களை வெளிக் காட்டுவதன் மூலம் இன்பம் பெறுகின்றனர். இதுபோன்ற வழிகெட்ட
பாலியல் தணிப்புப் பழக்கங்களை இஸ்லாம் முற்றிலும் மறுத்துக் கண்டிக்கிறது. எனவே, பிறர் பார்க்கக்கூடிய பொது இடங்களில் - தோட்டங்கள், பொது பூங்காக்கள், கார்கள், கடற்கரைகள், அடுக்கு மாடிக் கட்டிடங்களின் வெளிப்புறத்திலுள்ள மாடி முகப்பு அல்லது உள்முற்றங்கள் - உடலுறவுகொள்வது திட்டவட்டமாக விலக்கப்பட்டதும் பாவமானதுமாகும். மேலும், பல நாடுகளில், பொது இடங்களில் உடலுறவுகொள்வது சட்டத்துக்குப் புறம்பானது. ஆக, அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை மீறுவது மட்டுமின்றி, தங்கள் நாட்டின் சட்டத்கையும் மீறி, இழிவுக்கு ஆளாகின்றனர்; மேலும், ஒழுக்க
நாகரிகமற்ற செயலுக்காகக் கைது நடவடிக்கைக்கும் ஆளாகலாம்.
Comments
Post a Comment