பெண்மைசார்ந்த நடத்தை:

 


பெண்மைசார்ந்த நடத்தை:



உடலுறவுக்கு உளரீதியாகத்‌ தயாராகும்‌ ஒரு பெண்‌, தன்னுடைய மென்மையும்‌ நளினமும்‌ பெண்மைசார்ந்த நடத்தைகளும்தான்‌ தன்‌ கணவனைத்‌ தன்‌ பக்கம்‌ ஈர்க்கும்‌ என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்‌. முரட்டுத்தனமும்‌, ஆண்‌ போன்ற இயல்புகளும்‌, பொதுவாக ஆண்களுக்கு ‘ஆசை கெடுக்கும்‌' விஷயங்கள்‌ என்பதை விளங்கிக்‌ கொள்வது அவசியம்‌”.



பெண்ணின்‌ குரலில்‌ ஓர்‌ இயற்கையான கவர்ச்சியையும்‌ ஈர்ப்பையும்‌ இறைவன்‌ வைத்துள்ளான்‌. இது ஆணிடம்‌ பாலியல்‌ கிளர்ச்சியூட்ட வல்லது. இந்த உண்மையை எவராலும்‌ மறுக்கவியலாது. பல


உளவியலாளர்களும்‌ இதை ஏற்றுள்ளதோடு, அவர்கள்‌, ஒருவரின்‌ குரல்‌ பாலியல்‌ ஆசைகளைக்‌ தூண்டுவதில்‌ பெரும்பங்கு வகிப்பதாக அழுத்தமாகக்‌ குறிப்பிட்டுள்ளனர்‌.



இதனால்தான்‌, இறைவன்‌ குறிப்பாகத்‌ தன்னுடைய தூதரின்‌ மனைவிமார்களையும்‌, பொதுவாக அனைத்து முஸ்லிம்‌ பெண்களையும்‌, அந்நிய அண்களிடம்‌ மென்மையான, இனிமையான குரலில்‌ பேசவேண்டாம்‌ எனக்‌ தடுத்துள்ளான்‌.



இறைவன்‌ கூறுகிறான்‌:



நபியின்‌ மனைவியரே! நீங்கள்‌ ஏனைய சாதாரணப்‌ பெண்களைப்‌ போன்றவர்கள்‌ அல்லர்‌. நீங்கள்‌ அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாய்‌ இருந்தால்‌


மென்மையாகக்‌ குழைந்து பேசாதீர்கள்‌. ஏனெனில்‌ உள்ளத்தில்‌ கெட்ட எண்ணம்‌ கொண்டிருக்கும்‌ யாரேனும்‌ ஒருவன்‌ சபலம்கொள்ளக்‌ கூடும்‌.


(குர்‌ஆன்‌ 33:22)



அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌), பெண்‌ நடத்தைகொண்ட ஆண்களையும்‌, ஆண்‌ நடத்தைகொண்ட பெண்களையும்‌ சபித்துள்ள ஹதீஸிற்கு, இமாம்‌ பத்ருத்தீன்‌ அல்‌-அய்னி அளிக்கும்‌ கருத்துரையில்‌, எதிர்பாலினரின்‌ பாவனை அறிந்தும்‌ அறியாமலும்‌ -


இரண்டு விதத்திலும்‌ - செய்யப்படுகின்றன என விளக்குகிறார்‌. இந்த ஹதீஸில்‌ உள்ள குற்றச்சாட்டும்‌ சாபமும்‌, அறிந்து செய்பவர்கள்‌ மீதே சாரும்‌. (உம்தத்‌ அல்‌-காரி ஷரஹ்‌ சஹீஹ்‌ அல்‌-புஹாரி 15:85)


அந்திய ஆண்களோடு மிகுந்த மென்மையுடன்‌ பேச வேண்டாம்‌ எனவும்‌, அவர்களோடு பேசுகையில்‌ உள்ளடக்கமும்‌ பொருளும்‌ நேர்மையாக இருக்கவேண்டும்‌ எனவும்‌, ஆசை தூண்டுதல்‌ அறவே


இருக்கக்கூடாது எனவும்‌ மேற்கூறிய வசனம்‌ பெண்களுக்குக்‌ கட்டளையிடுகிறது. ஏனெனில்‌, அந்நிய ஆண்களிடம்‌ மென்மையாகவும்‌, இச்சையைத்‌ தூண்டும்‌ விதத்திலும்‌, கொஞ்சிக்‌ குழைந்தும்‌ உரையாடுவது விலக்கப்பட்ட (ஹராம்‌) ஒன்றில்‌ வீழ்வுதற்கான வழியாகும்‌. எனவே, தவறு செய்வதற்கான வழியும்‌ தடைசெய்யப்பட்டுள்ளது.

Comments