பாலியல்‌ கிளர்ச்சியூட்டக்கூடிய நடனமும்‌ இசையும்:

 


பாலியல்‌ கிளர்ச்சியூட்டக்கூடிய நடனமும்‌ இசையும்:



இசையுடன்‌ கூடிய நடனம்‌ - அது பாலியல்‌ உசுப்பேற்றக்கூடியதோ இல்லையோ - விலக்கப்பட்ட, பாவமான செயல்‌ என்பது பொதுவான விதி. இசை கேட்பது இஸ்லாமியச்‌ சட்டத்தில்‌ ‌ திட்டவட்டமாகத்‌ தடைசெய்யப்பட்டது. அது பல சுய, சமூகக்‌ கோளாறுகளை விளைவிக்கும்‌.



பிரத்யேகமாக களிப்புக்கும்‌ நடனத்துக்கும்‌, மற்றும்‌ கேட்போரைக்‌ கவர்ந்திழுக்கக்கூடிய வகையில்‌ வடிவமைக்கப்பட்டுள்ள இசைக்‌ கருவிகள்‌ தடைசெய்யப்பட்டவையாகும்‌, அவற்றுடன்‌ மனிதகுரல்‌ இல்லாவிட்டாலும்‌ சரி. அதாவது கொட்டு, வீணை, ஆறு நரம்பு யாழ்‌, பிடில்‌, புல்லாங்குழல்‌, லூட்‌, மன்டோலின்‌, ஆர்மோனியம்‌, பியானோ ஆகிய அனைத்தையும்‌ பயன்படுத்துவதும்‌ கேட்பதும்‌ தவறு. இதற்கான ஒரே விதிவிலக்கு தஃப்‌ (பறை போன்றது) மட்டுமே. இது “சலசல” மணிகள்‌ இல்லாத ஒரு சாதாரணத்‌ தம்போரின்‌. இதுகுறித்து நபித்‌ தோழர்கள்‌ (சஹாபா), அவர்களைப்‌ பின்பற்றியவர்கள்‌ (தாபியீன்‌), சட்டவியலாளர்கள்‌ :புகஹா) அறிஞர்கள்‌ ஆகியோரின்‌ காலகட்டம்‌ தொட்டு ஒருமித்த கருத்து உள்ளது. (பதாயி அல்‌-சனாயி 6:269 முக்னீ அல்‌-முஹ்தாஜ்‌ 4:429 அல்‌-முக்னீ 12:39)



அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) இவ்வாறு கூறுவதைத்‌ தாம்‌ செவியுற்றகாக அபூமாலிக்‌ அல்‌-அஷ்‌அரி (ரழி) அறிவிக்கிறார்‌:



விபச்சாரக்தையும்‌ பட்டுத்‌ துணியையும்‌ மதுவையும்‌ இசைக்‌ கருவிகளையும்‌ ஆகுமானதாகக்‌ கருதும்‌ மக்கள்‌ என்‌ உம்மத்தில்‌ தோன்றுவார்கள்‌. (சஹீஹ்‌


அல்‌-புஹாரி5268)



இசையின்‌ தடை பற்றி ஏராளமான நபிமொழிகள்‌ (ஹதீஸ்கள்‌) உள்ளன. இமாமாம் இப்னு ஹஜர்‌ அல்‌-ஹய்தமி (ரஹ்‌) இந்த ஹதீஸ்கள்‌ அனைத்தையும்‌ (சுமார்‌ நாற்பது) தம்முடைய அருஞ்சிறப்பான நூலில்‌(கஃப்‌ அல்‌-ராஅ அன்‌ முஹாரமத்‌ அல்‌-லஹ்வ்‌ வ அல்‌-சமா) திரட்டி, இதுபற்றிக்‌ கூறுகிறார்‌: 'எல்லாவகை இசைக்கருவிகளும்‌ விலக்கப்‌பட்டவை என்பதற்கு இவையனைத்தும்‌ தெளிவான, வெளிப்படையான, வலுவான புனித உரை ஆதாரங்களாகும்‌.” (2:870)



ஆக, மனைவி எவ்விதத்திலும்‌ “இசை நடனம்”‌ ஆடுவது பாவம்‌. எனெனில்‌, இசைகேட்பதே தடைசெய்யப்பட்டுள்ளது. இதை அவள்‌


தன்‌ கணவனுக்காகத்‌ தங்களின்‌ சொந்த அறையில்‌ தனியாக இருக்கும்‌ பொழுது செய்தாலும்‌ அது விலக்கப்பட்டதே.



எனினும்‌, இசையின்றி தன்‌ துணைவரின்முன்‌ நடனம்‌ ஆடுவதற்கு தடையில்லை. எனினும்‌, அது கபடமற்றதாகவும்‌ ஒழுக்க நாகரிகமுடையதாகவும்‌ இருக்கவேண்டும்‌. (இச்சையைக்‌ தூண்டுவதாகவும்‌


உசுப்பேற்றுவதாகவும்‌ இருப்பதில்‌ தவறில்லை).




ஆபாசப்‌ படம்‌:



தம்பதியர்‌ புணர்ச்சிக்குமுன்‌ பாலியல்‌ கிளர்ச்சியூட்டுவதற்காக ஆபாசப்‌ படம்‌ பார்ப்பதற்கு அனுமதியுண்டா? திட்டவட்டமாக, அழுத்தம்‌ திருத்தமாக 'இல்லை” என்பதே இந்தக்‌ கேள்விக்கான பதில்‌. ஆபாசப்‌ படம்‌ - அது ஒளிக்காட்சிப்‌ படங்கள்‌, திரைப்படங்கள்‌, புதினங்கள்‌, நாடகங்கள்‌, படங்கள்‌, புகைப்படங்கள்‌ ஆகிய எதுவாயினும்‌ விலக்கப்பட்டது, வெட்கக்கேடானது, பாவமானது என்பதில்‌ சந்தேகமேயில்லை. அம்மணக்‌ கோலத்தைப்‌ பார்ப்பதோ பிறர்‌ உடலுறவுகொள்வதைக்‌ கண்ணுறுவதோ இஸ்லாத்தில்‌ தெளிவாகத்‌ தடைசெய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்‌ கூறுகிறான்‌:



இறைநம்பிக்கையுள்ள ஆண்களிடம்‌ கூறுங்கள்‌, அவர்கள்‌ தங்கள்‌ பார்வைகளைத்‌ தாழ்த்திக்கொள்ளட்டும்‌ மற்றும்‌ பாலுறுப்புகளைக்‌ காத்துக்‌கொள்ளட்டும்‌ என்று. இது அவர்களின்‌ ஒழுக்கத்துக்கு அதிக உகந்ததாகும்‌. நிச்சயமாக அவர்கள்‌ செய்வது குறித்து அவன்‌ சகலவற்றையும்‌ அறிந்தவனாக இருக்கின்றான்‌. மேலும்‌, இறைநம்பிக்கையுள்ள பெண்களிடம்‌ கூறுங்கள்‌, அவர்கள்‌ தங்கள்‌ பார்வைகளைத்‌ தாழ்த்திக்கொள்ளட்டும்‌ மற்றும்‌ பாலுறுப்புகளைக் காத்துக்கொள்ளட்டும்‌ [...] (குர்‌ஆன்‌ 24:30-31)



இவ்வசனங்களில்‌ ஆண்‌, பெண்‌ ஆகிய இருபாலருக்கும்‌ தங்கள்‌ பார்வைகளைத்‌ தாழ்த்திக்கொள்ளுமாறும்‌ பிறரின்‌ மறைவான பகுதிகளைப்‌ பார்ப்பதைத்‌ தவிர்க்குமாறும்‌ கட்டளையிடப்பட்டுள்ளது. ஒருவரின்‌ பார்வை நாட்டமின்றி, தன்னிச்சையாக இன்னொருவரின்‌


மறைவான பகுதிகள்மீது பட்டுவிட்டால்‌, அவர்‌ சட்டெனத்‌ தன்‌ பார்வையைத்‌ திருப்பிக்கொள்ள வேண்டும்‌. ஜரீர்‌ இப்னு அப்துல்லாஹ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:



தன்னிச்சையான பார்வை குறித்து நான்‌ அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ வினவினேன்‌. அவர்கள்‌ என்னிடம்‌ பார்வையைத்‌ திருப்பிக்கொள்ளுமாறு


கட்டளையிட்டார்கள்‌. (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 2159 சுனன்‌ அல்‌-திர்மிதீ 2776, இங்கு திர்மிதியின்‌ சொற்களே இடம்பெற்றுள்ளன)



இந்த நபிமொழிக்கான தம்‌ கருத்துரையில்‌ இமாம்‌ நவவி கூறுகிறார்‌:


தன்னிச்சையான பார்வை' என்பதன்‌ பொருள்‌, ஒருவரின்‌ பார்வை நாட்டமின்றி மஹ்ரம்‌-அல்லாத பெண்‌ ஒருத்தி மீது பட்டுவிடுவதாகும்‌. முதல்‌ பார்வை பாவம்‌ இல்லை. எனினும்‌, அவர்‌ உடனடியாகக்‌ தம்‌


பார்வையைத்‌ திருப்பிக்கொள்ள வேண்டும்‌. அவர்‌ தம்‌ பார்வையை உடனடியாகத்‌ இருப்பிக்கொள்வார்‌ எனில்‌, அவர்மீது பாவம்‌ இல்லை. எனினும்‌, அவர்‌ தொடர்ந்து பார்வை செலுத்திக்கொண்டிருந்தால்‌,


இந்த ஹதீஸின்படி. அவர்‌ பாவச்‌ செயலைச்‌ செய்கிறார்‌. ஏனெனில்‌, அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தம்‌ தோழரிடம்‌ பார்வையைத்‌ திருப்பிக்‌


கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்‌; மற்றும்‌, அல்லாஹ்‌: கூறுகிறான்‌: “இறைநம்பிக்கையுள்ள ஆண்களிடம்‌ கூறுங்கள்‌: அவர்கள்‌ தங்கள்‌


பார்வைகளைக்‌ தாழ்த்திக்கொள்ளட்டும்‌; மேலும்‌ பாலுறுப்புகளைக்‌ காத்துக்கொள்ளட்டும்‌ என்று” (அல்‌-பின்ஹுஜ்‌ ஷரஹ்‌ சஹீஹ்‌ முஸ்லிம்‌ ப.1618)


 


அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூசயீத்‌ அல்‌-ஃகுத்ரி (ரஹி) அறிவிக்கிறார்‌:



ஓர்‌ ஆண்‌ இன்னொரு ஆணின்‌ மறைவு பாகங்களைப்‌ பார்க்கக்கூடாது. ஒரு பெண்‌ இன்னொரு பெண்ணின்‌ மறைவு பாகங்களைப்‌ பார்க்கக்கூடாது...


(சுனன்‌அல்‌-திர்மிதி 2793)


ஓர்‌ ஆண்‌ இன்னொரு ஆணின்‌ மறைவு பாகங்களைப்‌ பார்க்கக்கூடாது. ஒரு பெண்‌ இன்னொரு பெண்ணின்‌ மறைவு பாகங்களைப்‌ பார்க்கக்கூடாது...


(சுனன்‌அல்‌-திர்மிதி 2793)



ஜர்ஹத்‌ அல்‌-அஸ்லமியின்‌ தொடை வெளியே தெரியும்‌ நிலையில்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவரைக்‌ கடந்துசென்றதாக அவரே அறிவிக்கிறார்‌. அப்போது அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறினார்கள்‌:



உன்‌ தொடையை மறைத்துக்கொள்‌. அது மறைக்க வேண்டிய பாகங்களில்‌ ஒன்று. (சுனன்‌ அல்‌-திர்மிதி 2798)



ஆபாசப்‌ படங்கள்‌ தம்பதியரின்‌ பாலியல்‌ வாழ்விற்குத்‌ துணை புரிவதில்லை. மாறாக, அதை அழித்துவிடுகிறது. ஆபாசப்‌ படம்‌ பார்த்தல்‌, ஒருவரை மிகுதியாக அடிமைப்படுத்தக்‌ கூடிய நோயாகும்‌.


அது சுய தீங்கிற்கும்‌ தற்புணர்ச்சிக்கும்‌ வழிவகுக்கும்‌ என்பது நியதி. நிர்வாணப்‌ படங்களைப்‌ பார்ப்பதாலும்‌ ரசிப்பதாலும்‌ ஆணும்‌ பெண்ணும்‌ இயற்கை வழியில்‌ ஒருவருக்கொருவர்‌ கிளர்ச்சி அடைந்து


கொள்ளும்‌ திறனை இழந்துவிடுகின்றனர்‌. அவர்கள்‌ தங்கள்‌ துணையாள்களின்‌ மூலம்‌ உசுப்பேற சிரமப்படுகின்றனர்‌. ஆனால்‌, ஆபாசப்‌ படம்‌ மூலம்‌ எளிதாக உசுப்பேறுகின்றனர்‌. இதனால்தான்‌, உலகில்‌


உளவியல்ரீதியான மலட்டுத்தன்மைக்கு ஆபாசப்‌ படம்‌ மிகப்‌ பொதுவான காரணமாக இருக்கிறது. ஆபாசப்‌ படம்‌ பார்க்கும்‌ வழக்கமுள்ள முஸ்லிம்‌ தம்பதிகள்‌, அதன்‌ காரணமாக நாளடைவில்‌ தங்கள்‌ பாலியல்‌ வாழ்வில்‌ பிரச்னைகள்‌ ஏற்படும்‌ என்பதை உணர வேண்டும்‌. எனவே, அவர்கள்‌ செழிப்பான தாம்பத்தியம்‌ நடத்த நாடினால்‌, இந்த இழிவான, வழிகெட்டுப்போன ஓழுக்கக்கேட்டை அவர்கள்‌ உடனடியாக நிறுத்தவேண்டும்‌.


Comments