ஆண், மேலிருந்து புணரும் நிலை:

 


ஆண், மேலிருந்து புணரும் நிலை:


ஆண் மேல்புறம் இருப்பதே, இயல்பான, மிக வழக்கமான உடலுறவு நிலையாகும். இதில் ஒரு வடிவம், பெண் மல்லாந்து படுத்து தன் கால்களை விரித்துவைத்திருக்க, கணவன் அவள் மீது தட்டையாகச் சாய்ந்து தன் உடலால் அவள் உடலை மறைப்பது (மிஷனரி பொஷிஷன்). எனினும், இந்த நிலையில் கணவன் தன் எடை அனைத்தையும் அவள் மீது சாத்தி அழுத்தாமல் இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், இது அவளுக்குக் தொல்லையாக இருக்கலாம். அவர் தம் எடை முழுவதையும் அல்லது பகுதியைக் தம் முழங்கைகள், கைகள் அல்லது முழங்கால்களால் தாங்கிக்கொள்ளலாம்.


இந்த நிலை பற்றிய மறைமுகமான சுட்டுதல் குர்ஆனில் உள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான்:


அவனே உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்து, அவரிலிருந்து அவரின் மனைவியை உருவாக்கினான், அதன் மூலம் அவர் அவளிடம் இன்பம் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக. ஆக, அவர் தன்னைக்கொண்டே அவளை மறைக்கும் பொழுது, அவள் இலகுவான சுமையை சுமக்கிறாள் மற்றும் அதை தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் செல்கிறாள். அதன்பின், அவளின் சுமை கூடும்போது, அவர்களிருவரும் தங்கள் இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர்: 'நீ எங்களுக்கு பரிபக்குவமான குழந்தையை அருளினால், தாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம். எனினும், நாம் அவர்களுக்கு பரிபக்குவமான குழந்தையை அருளியபின், அவர்களுக்கு அவன் அருளிய விஷயத்தைப் பொறுக்கதே அவர்கள் அவனுக்கு இணை கற்பிக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் அவனுடன் இணை கற்பிப்பவற்றை விட அவன் மிக்க உயர்ந்தவன். (குர்ஆன் 7:189- 190)


இந்த வசனம், ஆதம், ஹவ்வா (அலை) ஆகியோரின் படைப்பு குறித்து சுட்டுகிறது. மேலும், இவர்களின் சந்ததியினரில் இணைவைப்பவர்களின் மனப்பாங்கையும் அது வெளிப்படுத்துகிறது. அவர்களில் ஒருவர் தம் மனைவியை முழுவதுமாக மூடிய வண்ணம் அவளுடன் உடலுறவு கொண்டு அவள் கருத்தரிக்கும்பொழுது, அவர்களிருவரும் தங்களுக்கு ஒர் ஆரோக்கியமான, பரிபக்குவமான குழந்தையை அருளுமாறு அல்லாஹ்விடம் வேண்டுகின்றனர். எனினும், குழந்தை பிறந்தபின் அவர்கள் அதை, தங்களின் கற்பிதக் கடவுள்களின் அருள் எனக் கூறிக் கொள்கின்றனார். (காண்க: த மீனிங்ஸ் ஆஃப் த நோபில் குர்ஆன் (ஆங்.) 1:315)


இந்த வசனத்தில் வரும், "அவர் தன்னைக்கொண்டே


அவளை மறைர்பொ" எனும் சொற்றொடர், கணவன் மனைவி மீது படுத்து தன் உடலைக்கொண்டு அவளை முழுவதுமாக மறைக்கும் நிலையைச் சுட்டுகிறது.


இதேபோன்ற நிலையில், பெண் மல்லாந்து படுத்து தன் கால்களை தன் நெஞ்சோடு அணைக்கும் அளவுக்குத் தூக்கி, முழங்கால்களை உயர்த்திக் கொள்கிறாள். கணவன் ஏறத்தாழ அமர்ந்த அல்லது குந்திய நிலையில் அவளைப் புணர்கிறான்.


இந்த நிலையைப் பின்வரும் நபிமொழி மறைமுகமாகச் சுட்டுகிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்:


ஒரு மனிதர் அவளின் (தன் மனைவியின்) நான்கு பாகங்களுக்கு மத்தியில் அமர்ந்து அழுத்தம் கொடுப்பாராயின், அவர் மீது குளிப்பு (குஸ்லு) கடமையாகி விடுகிறது. (சஹீஹ் மூஸ்லிம் 348)


இமாம் நவவி கூறுகிறார்: அந்த "நான்கு பாகங்கள் (ஷுஅப் அல்-அர்ப)" என்பது எவற்றைக் குறித்து கூறப்பட்டது என்பதில் அறிஞர்கள் கருத்துவேறுபடுகின்றனர். சிலர், அது கைகளையும் கால்களையும் குறிப்பதாகக் கூறுகின்றனர். வேறு சிலர், அது கால்களையும் தொடைகளையும் குறிப்பதாகக் கூறுகின்றனர். இன்னும் சிலர், அது கால்களையும் பாலறுப்புப் பகுதியின் ஓரங்களையும் குறிப்பகாகக் கூறுகின்றனர்.


கால்களையும் பாலறுப்புப் பகுதியின் ஓரங்களையும் குறிப்பகாகக் கூறுகின்றனர். காழி இயாழ் அவர்களோ, பெண்குறியைச் சுற்றியுள்ள நான்கு பகுதிகள் எனும் பொருளைத் தேர்வு செய்துள்ளார்...."


(அல்-மின்ஹாஜ் ஷரஹ் சஹிஹ் முஸ்லிம் ப.400)


உள்ளபடியே, அந்த 'நான்கு பாகங்கள்: குறித்த விளக்கங்களில், பெண்ணின் கால்களும் தொடைகளும் அடங்குகின்றன. இதில், மனைவி மல்லாந்து படுத்துத் தன் முழங்கால்களை மடக்கிவைக்கிருக்கும் நிலையில் கணவன் ஏறத்தாழ அமர்ந்த நிலையில் அவளைப் புணர்கிறான். அப்போது, அவளுடைய தொடைகளும் முழங்காலுக்குக் கீழுள்ள சதைகளும் நான்கு பாகங்களாக அமைகின்றன. இதையே இந்த விளக்கம் சுட்டுவகாகக் தெரிகிறது.


மேலும் ஆண் மேலே இருந்து புணரும் நிலைகளில் பலவிதங்கள் உள்ளன. அவற்றுக்கிடையில் சிறு சிறு வித்தியாசங்களே நிலவுகின்றன. ஆண் மேலே இருந்து புணரும் நிலையே, பெண் கருத்தரிப்பதற்கு மிக ஏதுவானது என அறிஞர்களும் நிபுணர்களும் ஒருமித்த கருத்தைக் கூறுகின்றனர். இதில், மிகுந்த உடலுடன் உடல் தொடுதலுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது; மற்றும், தம்பதியர் ஒருவரையொருவர் ஒரே சமயத்தில் முத்தமிட்டுக் கட்டியணைத்துக்கொள்ள வசதியளிக்கிறது. (அல்-திப் அல்-நபவி ப.182


Comments