ஒரு நாளைக்கு எத்தனை தடவை உடலுறவு கொள்வது?

 


ஒரு நாளைக்கு எத்தனை தடவை உடலுறவு கொள்வது?



பகலிலோ இரவிலோ ஒரு நேரத்தில்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட தடவை தம்பதியர்‌ உடலுறவுகொள்வதற்கு இஸ்லாம்‌ அனுமதியளிக்கிறது.


இமாம்‌ இப்னு அல்‌-கையூம்‌ அல்‌-ஐவ்ஸிய்யா தம்முடைய அல்‌-திப்‌ அல்‌-நபவியில்‌ இதுபற்றி கூறுகிறார்‌. பாலுறவு ஆசை முதிர்ந்து இருக்கும்‌


பொழுதே ஒருவர்‌ உடலுறவு கொள்ளவேண்டும்‌. ஒன்றை நினைப்‌பதையோ பார்ப்பதையோ சாராமல்‌, ஆணுக்கு இயல்பாக விறைப்பு ஏற்பட வேண்டும்‌. பாலுறவு ஆசையை (ஷஹ்வா) ஒருவர்‌ தம்‌ மீது


வலுக்கட்டாயமாக உண்டாக்கிக்கொள்வது சரியானதல்ல. (அல்‌-திப்‌ அல்‌-நபவி ப.181)



ஆக, மீண்டும்‌ உடலுறவுகொள்வதற்கு உண்மையான விருப்பம்‌ இருப்பின்‌, தம்பதியர்‌ அதில்‌ ஈடுபடலாம்‌. இல்லாவிட்டால்‌, அவர்கள்‌ முழுமையாக புத்துணா்வும்‌ புதுத்தெம்பும்‌ அடையும்வரை காத்திருப்பது


மேல்‌. இந்த விஷயத்தில்‌, தம்பதியர்‌ இருவரும்‌ தத்தமது துணைவரின்‌ உடல்நிலை குறித்து மிகவும்‌ எச்சரிக்கையாகவும்‌ மரியாதையுடனும்‌


இருப்பது அவசியம்‌. இல்லையெனில்‌, ஒருவர்‌ ஆயத்தமில்லாத ஒரு விஷயத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது போல ஆகிவிடும்‌.



உடலுறவுக்குப்‌ பிறகு குளிக்காமல்‌ தூங்கலாமா?



ஒருவா்‌ குளிக்காமல்‌ உறங்க விரும்பினால்‌, அவர்‌ ஒளு செய்து கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்‌.



அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்‌:



அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) குளிப்பு கடமையான நிலையில்‌ உறங்கச்‌ செல்ல விரும்பினால்‌ அவர்கள்‌ தம்‌ பாலுறுப்புகளைக்‌ கழுவி, தொழுகைக்காக


செய்வதுபோன்ற ஒளு செய்துகொள்வார்கள்‌. (சஹீஹ்‌ அல்‌-புஹாரி 284 மற்றும்‌ சஹீஸ்‌ முஸ்விம்‌ 305, இங்கு புஹாரியின்‌ சொற்களே இடம்பெற்றுள்ளன)



அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ உமர்‌ இப்னு அல்‌-கத்தாப்‌ (ரழி) வினவினார்கள்‌: 'குளிப்பு கடமையான நிலையில்‌ எங்களுள்‌ ஒருவார்‌ உறங்கலாமா? அதற்கு நபியவர்கள்‌ (ஸல்‌) பதிலளித்தார்கள்‌:



ஆம்‌, ஒளு செய்துகொண்டால்‌ ஒருவர்‌ குளிப்பு கடமையான நிலையிலேயே உறங்கலாம்‌. (சஹீஹ்‌ அல்‌-புஹாரி 283, சஹீஹ்‌ மூஸ்விம்‌ 306 மற்றும்‌ சுனன்‌ அல்‌-திர்மிதி 120, இங்கு புஹாரியின்‌ சொற்களே இடம்பெற்றுள்ளன)



இரவில்‌, தாம்‌ ஜுனுப்‌ ஆகிவிடுவதாக உமர்‌ இப்னு அல்‌-கத்தாப்‌ (ரழி) அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ கூறினார்‌: இதற்கு அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவரிடம்‌ இவ்வாறு பதிலுரைத்தார்கள்‌: ஒளு செய்து, உம்‌ பாலுறுப்புகளைக்‌ கழுவிக்கொண்டபின்‌ உறங்கச்‌ செல்லவும்‌. (சஹீஹ்‌ அல்‌-புஹாரி 286, சஹீஸ்‌ முஸ்லிம்‌ 306)


Comments