குழந்தைகளின்முன் உடலுறவு கொள்ளுதல்:
சிறு குழந்தைகளின் முன்னிலையில் உடலுறவுகொள்ளும் விஷயத்தில், குழந்தை விவரம் அறியும் பருவம் (தம்யீஸ்) எய்தி, தன் முன்னிலையில் நடப்பதை விளங்கிக்கொள்ளும் திறன் பெற்றுவிட்டால் அந்தத் திறன் ஓரளவு இருந்தாலும்கூட. - அதன் முன்னிலையில் தம்பதியர் உடலுறவுகொள்வது தடுக்கப்பட்ட விதத்தில் விரும்பத்தகாததும் பாவமும் ஆகும். (ரத் அல்-முஃக்தார் 4:208)
முஸ்லிம் தம்பதிகள் சிலர் இதில் மிகவும் கவனக்குறைவாக இருக்கின்றனர். தங்கள் பாலியல் செயல்களைத் தங்களின் சிறு குழந்தைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் வெளிப்படையாகக் காட்டுகின்றனர். பொதுவிடத்தில் நெருக்கத்தை வெளிப்படுத்தும் விஷயம் குறித்து இஸ்லாம் தெளிவாகக் கருத்துரைத்துள்ளது. குழந்தைகள் உள்ளிட்ட பிறர் முன்னிலையில் முத்தமிடுதல், கட்டித்தழுவுதல், தடவிக் கொடுத்தல் ஆகியவற்றை அது தடை செய்கிறது.
இறைநம்பிக்கை கொண்டவர்களே, உங்களுக்குச் சொந்தமான அடிமைகளும் உங்களுள் பருவம் அடைந்திராதவர்களும் (குழந்தைகள்) மூன்று சந்தர்ப்பங்களில் (உங்கள் முன்னிலையில் வருவதற்குமுன்) அனுமதி பெறவேண்டும்: ஃபஜ்ர் தொழுகைக்கு முன், நண்பகலில் நீங்கள் உங்கள் ஆடைகளைக் கழற்றும்போது மற்றும் இஷா தொழுகைக்குப் பின்; இவையே உங்களின் மூன்று தனித்திருக்கும் நேரங்களாகும். (குர்ஆன் 24:58)
அதே அத்தியாயம் (சூரா) வசனம் 27இல், ஒருவர் இன்னொருவரின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழையக்கூடாது எனும் வரம்பை அல்லாஹ் விதித்திருக்கிறான். எனினும், அதே வீட்டில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் அடிமைகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு உண்டு என்பதால், அவர்கள் குறிப்பான அனுமதியின்றி வீடுகளுக்குள் நுழையலாம். இருப்பினும், இவர்களும் கூட மூன்று தனிமை வேளைகளில் அனுமதி கோரவேண்டும். இமாம் இப்னு கஸீர் கூறுகிறார்: 'தனிமை நேரங்களில் பணியாட்களும் குழந்தைகளும் வீட்டின் பெரியவர்கள் உள்ள இடத்தில் நுழையவேண்டாம் என கட்டளையிடப்பட்டுள்ளது. ஏனெனில், (இந்நேரங்களில்) அவர் தம் மனைவியுடன் உடலுறவிலோ பிற பாலுறவு நெருக்கச் செயல்களிலோ ஈடுபட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ' (த.ஃப்சீர் அல்-குர்ஆன் அ अ ௩:௪௦௪)
ஷீரிஆ) பணிக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஏனெனில், தம்பதியருக்கு இடையில் நிகழும் எதையாவது அவர்கள் கண்டுவிடக் கூடும். ஆக, இவ்வாறு கட்டுப்பாடு இருக்கும் நிலையில், பிறர் முன்னிலையில் பாலுறவுச் செயல்களைத் தெரிந்தே வெளிப்படையாகச் செய்தல் எவ்வளவு அவமரியாதையானது?
அப்துல்லாஹ் இப்னு உமரிடமிருந்து நாஃபி
அறிவிக்கிறார்: அவருடைய (இப்னு உமர்) குழந்தை விவரம் அறியும் பருவத்தை எய்தியதும் அவனை (தன் அறையிலிருந்து) அகற்றி விடுவார். அதன் பிறகு, தன் அனுமதியின்றி அவன் (குழந்தை) உள்ளே நுழைய முடியாது." (இமாம் புஹாரியின் அல்- அதப் அல்-முஃப்ரத் 1058)
மூஸா இப்னு தல்ஹா கூறுகிறார்: நான் என் தந்தையுடன் என் தாயின் அறைக்குள் நுழைய முயன்றேன். அவர் உள்ளே சென்றார். நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். அப்போது அவர் திரும்பி தன்
நெஞ்சால் என்னைத் தள்ளினார். நான் பின்புறமாகக் கழே விழுந்தேன். "அனுமதியின்றி உள்ளே நுழைகிறாயா?" என அவர் கூறினார்." (அல்-அதப் அல்-மு.ஃப்ரத் ௧௦௬௧)
ஒரு மோசமான தவறைச் செய்கின்றனர் என்பதை உணரவேண்டும். இவர்கள் வெறும் சிறு குமந்தைகள்தாமே; இவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ளும் திறன் இல்லையே என அவர்கள் எண்ணுவது தவறு. உண்மையில், இச்செயல்பாடு குழந்தைகளின் வளர்ப்பில் மிகுந்த தீய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. குழந்தைகள் எல்லா விஷயத்திலும் தங்கள் பெற்றோர்களைப் போலவே நடக்கும் இயல்புடன் படைக்கப் பட்டுள்ளனர். எனவே, அவர்கள் தங்கள் பெற்றோர்களைப் பின்பற்ற முனைந்து அது விளையாட்டுக்காக இருந்தாலும்கூட - பிற குழந்தைகளுடன் இதைச் செய்யக்கூடும். இதன் அழிவுப்பூர்வமான விளைவு இன்று தெளிவாக
உள்ளது.
மேலும், இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகச் செய்வது நாணத்துக்கும் ஓழுக்க நாகரிகத்துக்கும் புறம்பானது. இஸ்லாம், தன் வழி நடப்பவர்களுக்குக் கண்ணியத்தைப் போதிக்கிறது; ஒழுக்கக்கேடான சூழலுக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலிலும் அவர்கள் ஈடுபடுவதைத் தடுக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெட்கம், நாணம் ஆகிய பண்புகளுக்கு நடைமுறை முன்மாதிரியாக விளங்கினார்கள். அபூ சயீத் அல்-குத்ரி (ரழி) அறிவிக்கிறார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), திரைமறைவிற்குப் பின்னுள்ள (அல்லது, தன் தனி அறையில் உள்ள) ஒரு கன்னிப்பெண்ணைக் காட்டிலும் அதிக நாணம் கொண்டவர்கள். அவர்கள் ஓரு விஷயத்தை விரும்பாவிட்டால், அதை அவருடைய முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துகொள்வோம். (சஹீஹ் முஸ்விம் 2480)
எனவே, தம்பதியர் சிறு குழந்தைகளின் முன்னிலையில் புணர்வது அல்லது முத்தமிடுதல், கட்டியணைத்தல், தடவுதல், பிடித்து விளையாடுதல் போன்ற பாலுறவுச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் வேண்டும். இன்னும், குழந்தை விவரம் அறியும் பருவத்தை எட்டி விட்டால், இவை பாவமான செயல்களாகும்.
பச்சைக்குழந்தை தூங்கும் அறையில் உடலுறவுகொள்வதைப் பொறுத்தவரை, இதுவும் இயன்றளவு தவிர்க்கப்படவேண்டும். ஏற்கனவே நாம் நம் முன்னோர்களை (சலப்) பற்றி கூறினோம். அதாவது அவர்கள்; பாலூட்டும் வயதில் - இரண்டுக்கும் குறைவான வயதில் - உள்ள குழந்தையோ விலங்கோ இருக்கும் அறையில்கூட உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பார்கள். இவ்வாறிருக்க, அது போன்ற குழந்தைகளின் முன்னிலையில் உடலுறவுகொள்வது சற்று விரும்பத்தகாதது. எனினும், அது விலக்கப்பட்டது (ஹராம்) எனக் கூறிவிடமுடியாது.

Comments
Post a Comment