மர்மஸ்தானத்தை சுவைக்கலாமா? வாய்வழி உறவு கொள்ளலாமா?

 


மர்மஸ்தானத்தை சுவைக்கலாமா? வாய்வழி உறவு கொள்ளலாமா?



ஆபாசப்படங்களின்‌ பரவலால்‌ வாய்வழி உறவுப்‌ பழக்கம்‌ அதிகரித்‌துள்ளது. இன்று பொதுவாகப்‌ பல தம்பதியர்கள்‌ இதைப்‌ பின்பற்றுகின்றனர்‌. எனவே, வாய்வழி உறவு குறித்த இஸ்லாமியக்‌ கண்ணோட்டம்‌


பற்றி முஸ்லிம்கள்‌ அடிக்கடி கேட்கின்றனர்‌. துரதிர்ஷ்டவசமாக, சிலர்‌ இதுபற்றிக்‌ கலந்துரையாடுவதிலிருந்து வெட்கப்பட்டு முற்றிலும்‌


ஒதுங்கிவிடுகின்றனர்‌. வேறுசிலர்‌, இது குறித்த எந்தவொரு கலந்துரையாடலும்‌ அத்துமீறிய செயலெனக்‌ கருதுகின்றனர்‌. இந்த இரு


அணுகுதல்களும்‌ சரியானவையல்ல. தம்‌ பாலியல்‌ வாழ்வு, இஸ்லாமிய போதனைகளுக்கு ஒத்திசைவாக இருப்பதை உறுதிசெய்வதற்கு, வாய்வழி உறவு குறித்த இஸ்லாமியக்‌ கண்ணோட்டம்‌ பற்றி விரிவாக


அலசுவது முக்கியம்‌.



வாய்வழி உறவு என்பது, ஒருவர்‌ மற்றவரின்‌ பிறப்புறுப்பை கிளர்ச்சியூட்டுவதற்குத்‌ தன்‌ வாயையோ நாவையோ பயன்படுத்துவதாகும்‌. ஆணுறுப்பை வாய்வழி கிளர்ச்சியூட்டுவதற்கு ஆங்கிலத்தில்‌


ஃபெல்லாஷியோ என்றும்‌ பெண்ணுறுப்பை வாய்வழியாக கிளர்ச்சியூட்டுவதற்கு கன்னிலிங்சஸ்‌ என்றும்‌ அழைப்பர்‌. வாய்வழி உறவு எனும்‌ சொல்‌, விரிவான செயல்வகைகளை உள்ளடக்கியுள்ளது. அதில்‌, வெறுமனே பிறப்புறுப்பை முத்தமிடுவது முதல்‌ அதை வாய்க்குள்‌ எடுத்து, பாலுறவுத்‌ திரவங்களை உட்கொள்ளும்வரை பல செயல்கள்‌ அடங்கும்‌. எனவே, இந்தச்‌ சொல்‌ குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்‌ எதைக்‌ குறிக்கின்றது என்பதைப்‌ பொறுத்து இஸ்லாமியச்‌ சட்டத்தீர்ப்பும் அமையும்‌.


இது சம்மந்தமாக பல தம்பதிகளிடையே பலத்த சந்தேகம் உள்ளது. மர்மஸ்தான உறுப்புகள் அசிங்கமான உறுப்புக்கள் என்பது பலரது எண்ணம். ஆனால் அவை அசிங்கமான உறுப்புகள் அல்ல. உடலின் இதர உறுப்புக்கள் போன்று தான் மர்ம உறுப்பும்.



தல்க் இப்னு அலி(ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் உளுச் செய்வது அவசியமா ? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதுவும் உனது உறுப்புகளில் ஒன்று தானே என நபி(ஸல்) பதில் அளித்தார்கள். (நூல் : திர்மிதி )



எனவே மர்ம உறுப்பை அசிங்கமாக கருத வேண்டியது இல்லை. கணவனும், மனைவியும் இச்சை உணர்வை அதிகப்படுத்த இதர உறுப்புகளில் சரச விளையாட்டுகளில் ஈடுபடுவது போல மர்ம உறுப்பையும் பயன்படுத்துவதில் தவறில்லை.



அதே வேளையில் உடலுறவில் ஈடுபடும் முன் இச்சையின் அறிகுறிக்கு காமநீர் வெளிப்படும் இந்த காமநீர் அசுத்தமானது என்பதை ஹதீஸ்கள் முலம் புரிய முடிகிறது.



அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நான் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமா) என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இது குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று கூறினார்கள்.


இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


(ஸஹீஹ் முஸ்லிம்: 508., அத்தியாயம்: 3. மாதவிடாய்)


காமத்தின் சூழல் காரணமாக தம்பதியர் மர்மஸ்தானத்தை சுவைக்கும் செயலில் ஈடுபட்டாலும் காமநீர் அசுத்தமானது என்பதை புரிந்து அசுத்தத்தை உட்கொள்ளுவது சரி அல்ல என்பதையும் புரிந்து கொள்ளல் அவசியமாகும். 



எனினும் ஆணின் மர்மஸ்தானத்திலிருந்து வெளிப்படும் விந்து அசுத்தமானது அல்ல என்பதை பின்வரும் ஹதீஸ்களில் இருந்து விளங்கி கொள்ளலாம்:



அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:


ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு அது தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில்பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


(ஸஹீஹ் முஸ்லிம்: 485., அத்தியாயம்: 2. தூய்மை)



அஸ்வத் (ரஹ்) மற்றும் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:


இந்திரியம் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகையில், அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து சுரண்டிவிடுவேன் என்று குறிப்பிட்டார்கள்.


(ஸஹீஹ் முஸ்லிம்: 486., அத்தியாயம்: 2. தூய்மை)


Comments